நினைப்பதெல்லாம் சமைத்துவிட்டால்

(நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்)

நினைப்பதெல்லாம் சமைத்துவிட்டால் ஐயம் ஏதுமில்லை
சமைப்பதேயே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நான் செய்த சமையல் ருசிப்பதில்லை எந்தன் தட்டினிலே
ருசியான சமையல் ஒன்றும் இல்லை அந்த கிட்சனிலே
(நினைப்பதெல்லாம் சமைத்துவிட்டால் ஐயம் ஏதுமில்லை)

குக்கரில் வைப்பேன் சாதம், கண்களின் ஓரமாய் ஈரம்
எவ்வளவு தண்ணி எவ்வளவு அரிசி என்பது கடைசிவரை தெரியாது
அரிசி முழுவது வெந்திருந்தால் துன்பம் ஏதுமில்லை
வெந்தும் வேகாமலே போயிருந்தால் அமைதி என்றுமில்லை
(நினைப்பதெல்லாம் சமைத்துவிட்டால் ஐயம் ஏதுமில்லை)

எங்கே சாம்பார் தொடங்கும் அது எப்படி எவ்விதம் முடியும்
இது தான் சாம்பார் இது தான் ரசம் என்பது யாருக்கும் தெரியாது
உப்புகாரமெல்லாம் மாறிவிடும் சமையல் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துக்கொண்டால் சமையல் ருசித்திவிடும்
(நினைப்பதெல்லாம் சமைத்துவிட்டால் ஐயம் ஏதுமில்லை)

எழுதியவர் : இரா.இரா (25-Aug-16, 4:10 pm)
பார்வை : 67

மேலே