இதோ உன் முகம்

சாதிக்கோடாரியே
மனிதம் வெட்டும்
நீதி சொல்கிறாய் ...
இதோ உன் முகம் !
முட்டாள்களின் முழக்கம்
பிணங்கள் தின்னும் புழு
கொலை செய்யும் குற்றவாளி
அறியாமையின் ஆணவம்
அதிலுறங்கும் அரக்கன்
பிறப்பின் நெறி தெரிந்தும்
பொய் சொல்லும் பொய்யன்
அடிமைத்தனத்தின் ஆதிவேர்
எல்லைக்கல் என்னும் மாயை
மாயம் செய்து வாழவைக்கும்
மனிதனை மிருகமாக ...

இத்தனை முகங்கள் என்ற திமிரில்
வன்முறை ஏந்தாதே -அது
உன் முகங்கள் அல்ல முகமுடிகள் எரிந்து போகும்
சற்று நாங்கள் சிந்தித்தால் போதும் ...
சிந்திப்போமா?


மருதுபாண்டியன். க

எழுதியவர் : மருதுபாண்டியன். க (26-Aug-16, 2:29 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : itho un mukam
பார்வை : 758

மேலே