பார்கோடுகள்

உன்னதமானக் காதலை
திரும்பத் திரும்ப அவனுக்கு
மறுத்திர்கள்.
வெறும் பணம் ஈட்டும்
பொம்மைகள் ஆக்குனிர்கள்
வீரம் அறவே கூடாது என்றிர்கள்.
வெறும் குறீயிடுகளும் பார்கோடுகளும்
தான் அவனுக்குப் புகழ்கொடுக்கும்
என்று அவனை நம்ப வைத்திற்கள்.
இன்று அவன் கருத்தரிப்பு
மையத்தில் வரிசையில் நின்றுக்
கொண்டு இருக்கிறான்.
அவன் அது கூட சில
கணிணி திட்டங்களின் தவறு என்று
எண்ணம் கொண்டு இருக்கிறான்.

எழுதியவர் : (26-Aug-16, 10:53 am)
பார்வை : 55

மேலே