யார் மனிதன்
யார் மனிதன்
பணம் என்றால் பினமாக
நடிப்பவர்கள்
மனிதர்களா...?
பாசம் என்றால் என்ன
என்று தெரியாது ஈன்றவளை
இருட்டறையில் அடைப்பவன்
மனிதனா...?
மதம்,ஜாதி என
மடக்கட்டையாக வாழ்பவன்
மனிதனா யார் மனிதன்...?
நகரீகம் என்ற பெயரில்
அநாகரீகம் செய்பவர்கள்
மனிதர்களா..?
உருண்டு ஓடும் பாதையில்
சுருட்டி ஓடியவன் எல்லாம் மனிதனா...?
உயிரின் மகிமை தெரியாது
தூசியாய் அகற்றியவன்
மனிதனா...?
மனிதன் என்ற போர்வையில்
மிருகங்கள் புதைந்து இருப்பதாவது தெரியுமா
உங்களுக்கு...?
நீ ஓடு நீ ஓடு
நீ மனிதனாய் மாறும்
வரை ஓடு
சிறந்தவனாய் வாழும்
வரை ஓடு
மிருகம் என்ற பெயரில் இருந்து
நீங்கும்
வரை ஓடு
ஓடிக் கொண்டு இரு
உனக்கான முடிவு
ஒன்று வரும்வரை
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை