விடியலை தேடி நானும்

விடியலை தேடி நானும்

காடு மலைகள்
கடந்தேன்
மழை வெயிலை
மறந்தேன்......

வியர்வை சிந்த
உழைத்தேன்
நீண்ட நேரம்
உழைத்தும்
குறைந்த
வேதனமே
பெற்றேன்....

நோய் நொடிகள்
பாராது
அயராது
உழைத்தேன்
அரை வயிறு
நிரப்பவும்
முடியாமல்
தவித்தேன்....

என் மகளாவது
எனை போல்
அல்லாது
பட்டப்படிப்பு
முடித்தே அவளும்
பட்டினியற்ற
வாழ்வினை
வாழ்ந்திட
வேண்டி உழைத்தேன்...

ஓயாமல்
கொழுந்துகளை
பறித்தேன்
ஒரு நாள்
ஓய்ந்து போன
என் கைகளோடு
மாண்டு போனது
என் உயிரும்
இங்கே....

என் வாழ்வு
தொடங்கிய
இடத்திலேயே
என் உடலும்
புதைந்து
போனது
அன்று......

இன்றோ
என் மகளும்
என் பிணத்தின்
மேலே
ஓயாமல்
பறிக்கிறாள்
கொழுந்துகளை
தன் மகளின்
விடியலுக்காய்.......!!

இதில் ஒலித்தது ஒரு குரல் அல்ல....இதை போல் விடியலுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கும் பல தோட்ட தொழிலார்களின் குரல்கள்.......

-சகி-

எழுதியவர் : அன்புடன் சகி (26-Aug-16, 3:08 pm)
பார்வை : 1298

சிறந்த கவிதைகள்

மேலே