வெற்றிக் கோப்பை
![](https://eluthu.com/images/loading.gif)
தோல்வியில் துவண்டவனுக்கு
உந்துதல் வெற்றிக் கோப்பை
மீண்டும் நடைபோட
கைத்தட்டலே
வெற்றிக் கோப்பை
அங்கீகாரம் என்ற
அடையாளத்தை தந்தது
வெற்றிக் கோப்பை
என்னிலும் திறமை
இருக்கிறது என்பதை
வெளிக் காட்டியது
வெற்றிக் கோப்பை
பொருளுக்கு பாடுவதை விட
அங்கீகாரத்திற்குத் தான் பாடுகிறேன்
வெற்றிக் கோப்பை
என்பது எனக்கு
பொருள் அல்ல
என் அங்கீகாரம்
எல்லோருடைய
கைத்தட்டலும்
பாராட்டுமே
எனக்கு மிகப்பெரிய
உயரிய அங்கீகாரம்
அதுவே என் வெற்றிக் கோப்பை
உமது ஊக்கம் தான்
எமது ஆக்கம் ஆகிறது
என் வெற்றிக் கோப்பைகள்
உன்னால் கிடைத்தவை
நீ கொடுத்த அங்கீகாரம் அவை.....
உன் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.....
என்றும் எம்மை பாராட்டும்
என் குறைகளை நிவர்த்தி செய்யும்
உம் நல்லுள்ளத்திற்கு
காணிக்கையாக்குகிறேன்
நீ தந்த என் வெற்றிக் கோப்பைகளை......
உலகத்தின் உயர்ந்த
வெற்றிக் கோப்பை
கைத்தட்டல்கள் தான்
படைப்பாளிக்கு அதை விட வேறு என்ன வேண்டும்.....
வெற்றிக் கோப்பையை உச்சி முகர்கிறேன்.....
அதில் வெளிப்படுகிறது
உங்களின் பாசமும்
நான் கடந்து வந்த பாதைகளும்.....
பாதையின் பயணம்
இனிமையாக காரணம்
நீங்கள் தந்த உற்சாகம்
அந்த உற்சாகத்தின்
ஊக்கத்தின்
பாராட்டின்
அடையாளம் தான்
அங்கீகாரம் தான்
உங்களின் பாசத்தின் அடையாளம் தான்
இந்த வெற்றிக் கோப்பை
~ பிரபாவதி வீரமுத்து