அங்கீகாரம்

எழுதி எழுதி
தோற்று போனேன் அங்கீகாரம்
இன்று கிடைக்குமோ
இல்லை நாளை கிடைக்குமோ என்று
காத்திருந்தேன் கையில் எழுது கோல்
கொண்டு ..........

எத்தனை முறை
எழுதினாலும் தோல்வியே கிடைத்தது
எனக்கு இதனால் எழுதுவதை நிச்சயமாக
நிறுத்த மாட்டேன்
மேலும் மேலும்
எழுதி கொண்டே இருப்பேன்
வெற்றி கிடைக்கும் வரை .........

ஆயிரம் தோல்விகள் என்னை
துரத்தினாலும் வெற்றி பெறும்
முனைப்புடன் செயல்படுவேனே தவிர
பின் வாங்க மாட்டேன் வெட்கப்பட்டு
ஒருபொழுதும் நான் ..........

மரத்துக்கு மரம் தாவும் குரங்கை போல்
கொண்ட குறிக்கோளை மாற்ற மாட்டேன் இந்த நிலையிலும்
கொண்ட குறிக்கோளை
குறிவைத்து காத்திருப்பேன்
குறிக்கோள் வெற்றி பெறும் வரை .......

திறமை என்பது எல்லாரிடமும் உண்டு
திரும்ப திரும்ப முயற்ச்சியும் பயிற்ச்சியும்
செய்பவன் நான் அது என்றாவது என் பக்கமும்
திரும்பும் ஒருநாள் ..........

வெற்றி என்பது ஒருவருக்கு சொந்தமில்லை
தோல்வி என்பது என்றும் எனக்கு நிரந்திரமில்லை
என்பதை உணர்ந்தவன் நான்

தன்னம்பிக்கையும் -விடாமுயற்ச்சியையும்
நிரந்தரமாய் என் உள்ளத்தில் பச்சை குத்தி
கொண்டவன் நான் அதனால் துவண்டு
விடமாட்டேன் தோல்விகளை கண்டு ........

என்றாவது ஒரு நாள் நானும்
என் வெற்றியை தாய் தந்தை உறவுகள் நட்ப்புடன்
பகிர்ந்து கொள்ள்வேன்
அன்னை தமிழ் கொண்டு !

உறுதியாக !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (30-Aug-16, 8:12 am)
Tanglish : ankeekaaram
பார்வை : 1204

மேலே