உயிர் வேலி
பல்லவி :
உயிரை நாற்றாக உனக்குள் புதைத்தேனே.....!
விழியே உனக்காக நாளும் இமைத்தேனே....!
நாடோடி மேகம் நானே.....! நீ வானம் .....!
நீங்காமல் வாழ்வேன் அன்பே எந்நாளும்.....!
அழகே உன் உறவு எனக்கு இறைவேதம்.....!
சரணம் 1:
மண்கொண்ட நீரப்போல......!
வான்கொண்ட மழையப்போல......!
நான்கொண்ட நெஞ்சுக்குள்ள வாழும் உயிரே .....!
வயக்காட்டு புல்லப்போல .....!
இளம்நாத்து நெல்லப்போல ....!
சொகமாக மனசுக்குள்ள வளரும் பயிரே.....!
உன் அன்பே சிறகாய் மாறும்
வானம் தண்டி நான் பறப்பேன்.....!
என்னோடு நீ இருந்தால்
தொடுவானம் நான் புடிப்பேன்.....!
உலகம் முடிந்தும் நான் வாழ்ந்திருப்பேன் .....!
சரணம் 2:
துறவாக வாழ்ந்தேன் அன்பே
துணையாக வந்தாய் நீயே
மாறவாத நேசம் கொண்டு தூறும் மழையே......!
பூவாகி வாசம் தந்தாய் ......!
தாயாகி பாசம் தந்தாய் ......!
உன்னோட அன்புக்குத்தான் ஏது விலையே......!
வெள்ளாமை காடே உனக்கு
உயிர்வேலி செஞ்சிடுவேன் .....!
நான் வாழும் கூடே - எங்க
பறந்தாலும் வந்துடுவேன்.....!
வயிற்றில் கருபோல் நெஞ்சில் சுமந்திடுவேன்......!