காற்றில் அணையா தீபம்

எண்ணெய் என்ற வேரூன்றி
நிற்கும் மரமாய் தீபம்
கோவில்களில் எல்லா இடங்களிலிலும்
மங்களகரமான தீபம்

கடவுள் உலகிற்கு ஏற்றிவைத்த
சூரியனொரு பகல் தீபம்
அவன் மறைந்தபிறகு மக்களை பார்த்திருக்கும்
சந்திரனொரு இரவு தீபம்

சிலர் கல்வி புகட்டி
மனதில் வீற்றிருப்பார் தீபமாய்
சிலர் நன்மை செய்தி
இதயத்தில் அமர்ந்திருப்பர் தீபமாய்

சிலர் சமுதாயம் முன்னேற்றி
ஆகியிருப்பர் எல்லோர்க்கும் தீபமாய்
சிலர் மட்டும் தீபமாகும் முயற்சியிலேயே
தீபமாகிப் போயிருப்பர்

தன் சிறு ஒளியால்
பேரிருட்டை விரட்டவல்லது தீபம்
தன் சிறு விழியால்
நம்மையுற்று பார்க்கவல்லது தீபம்

தன் சிறு மொழியால்
காற்றோடு விளையாடுவது தீபம்
தீப‌மொரு விளக்கின் முகவரி
தீபமில்லா விளக்கிற்கில்லை ஒருவரி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Aug-16, 8:33 pm)
பார்வை : 69

மேலே