ஆட்டுக்குட்டியும் நானும்
ஆட்டிக்குட்டி ஒன்னு
என் பக்கம் வந்து நிற்க
என்ன வேண்டுமின்னு
நான் அதனைப் பார்த்து கேட்க
ஒன்னுமில்லை தோழா
ஒரு சேதி சொல்ல வந்தேன்
என்னைவிட்டுச் சென்ற
என் சொந்தம் தேடி வந்தேன்
சொந்தம் பேருஎன்ன
நானும் சோக மாகக் கேட்க
எனக்கு பிடிச்சமாமான்னு
அதுவும் அழுத படியே கூற
மாமா தேடிக்கிட்டு
நாங்க காடு மேடு அலஞ்சோம்
கண்டுபிடிச்சே வருவோமென
ஊரு பூரா தேடிச் திரிஞ்சோம்
வழியில் கண்டமரங்களிடமும்
உதவி செய்யச் சொல்லிக் கேட்டோம்
பறவைக் கூட்டம்கூட
எங்கள் தேடல் பணியில் உதவ
நேரம் மதியமாச்சு
அவங்க மாமா காண வில்லை
கண்ணீர் சிந்தியபடியே
அதுவும் சாப்பிடக் கூட இல்லை
பசியும் அதிகமெடுக்க
நான் அம்மா சாப்பாடுன்னு கத்த
மணக்க மணக்கசாதம்
எனக்கு இலையில் வந்து விழுக
எதுக்கு பிரியாணின்னு
நான் அம்மாக் கிட்ட கேட்க
ஆடு ஒன்னுஅடிச்சோமுன்ன
அம்மா சொல்லி மெதுவாய் செல்ல
ஆட்டுக்குட்டியின் மாமா
இலையில் என்னைப் பார்த்து சிரிக்க
ஆட்டுக்குட்டியின் சோகம்
என் இதயம் மெல்ல அடைக்க
பசியில் இதயம்மூடி
நான் நன்றாய் உண்டு முடிக்க
ஆட்டுக்குட்டிக்கு பதிலாய்
நான் என்ன சொல்ல சொல்வீர்?