கருவறை சுகம்

அம்மா...
உந்தன் கருவறை சுகங்கள்...
காணமட்டும் உனக்குள்...
இன்னொருமுறையும் ...
கருவாய் எனை சுமப்பாயோ...!
அம்மா....

உன் பேரைச் சொல்லும்போதே ...
உள்ளம் உருகிப் போகின்றேன்...அம்மா..,

உன்னுடலை தானமாக்கி...
உன்னுயிருக்குள் எனை வளர்த்தாய்...தாயே!

என் சிற்றுயிர் உன்னுள் வளர...
குருதிகொடை எய்தினாய் நீயே...!

உன் தியாகம் புரியாது
உன்னை உதைத்திட்டேன் வயிற்றில்...
பொறுத்துக்கொண்டும் புன்னகைத்து...
புகட்டினாய் ஆகாரம் தொப்புள்வழி கயிற்றில்...

எனை இவ்வுலகம் சான்றோன்...
எனச் சொல்லும் சொல் கேட்க...
என் செவி வழியூட்டினாய் நற்போதனை...

தென்றலே...
என் தாயின் வாசம் சுமந்து வந்து...
என் சுவாசத்தில் சேர்த்து விடு...

விழிகளே!..
என் தாயின் பிம்பம்…
உன்னை விட்டும் விலகாமல்...
என்றும் விழித்திரு.../

உன் கரம்தொடா தூரத்தில்....நான்...
என் கரம் ஏந்தி நிற்கிறேன்...

இறைவா...
உன் மாநபி மும்முறை வியந்து கூறிய...
தாய்மையை என்றும் என்னுள் சுமக்கும்...
தூய்மையை எனக்குள் தந்துவிடு...

எழுதியவர் : (28-Aug-16, 2:00 pm)
சேர்த்தது : பாகை இறையடியான்
Tanglish : karuvarai sugam
பார்வை : 959

மேலே