அம்மாவின் அன்பினில்

பசியாக வீட்டுக்கு வந்தேன்..
ருசியாக மனைவி சமைத்திருப்பாள்
என்று எண்ணி...
பிசியாக இருக்கிறேன்...
வெளியே போய் வாங்கிட்டு வாங்க ..
ஈசியாக அவள் சொன்ன வார்த்தை..
பாசியாக மனதினில் படர்ந்தது...
தட்டில் சோறுடன் என் வருகைக்காக
தினம் காத்திருந்த தாயின் அன்பை
கண்முன் மெல்ல விரித்தது...
ஏசியாக என் மனம் குளிர்ந்துபோனது...