உயிரும் உடலும்

ஆத்தங்கர ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல
நெனப்பு முழுக்க நீ இருந்து வாட்டிக்கொண்டு இருக்க
வந்துபுட்டாயே
நெஞ்சை சரிய விட்டாயே
இவளை மாரில் வாங்கிக்கொள்ளடா
உயிரை கொன்னுபுட்டு போடா
உனக்காகவே ஆளாகி நிக்குறன்
உன்னாலே நாளும் தான்
வாழுறன்
மாமா நீ வரும் வழி பாத்து
நாளும் தான் துடிக்கிறன்
நானும் தான் கிடக்கறன்
நீ வந்துவிட்டாலே
உள்ளுக்குள்
உயிர் துடிக்குது
ஆயிரம் மத்தாப்பு வெடிக்குது
மனசு பறக்குது
எனை விட்டு நீங்காதே
என் சின்ன மனம் தாங்காதே
நீ என்ன விட்டு போனா
உடல் மண்ணுக்குள்ள போகும்
மச்சானே
உன் மனசுக்குள்ள நான் தானே
தூரங்கள் வலிக்குது மாமா
என்னை எடுத்து உடுத்திக் கொள்ளடா
என்னை கட்டிக் கொள்ளடா
உன் கண்ண பாத்து
உன் நெஞ்சில் சாஞ்சு
உன் தோளில் சரிந்து
உனக்குள்ளே வாழணும்
உன் மடியில் கெடக்கணும்
என் ஆச மச்சானே
என் ஆச(காதல்) புரிஞ்சுதா
எப்பொழுதோ
புரிஞ்சுதடி
உனக்காத் தான் நானடி
எனக்காகத் தான் நீயடி
ஆத்தங் கரை ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல
வெண்ணிலவு வெளிச்சத்துல
வெண்ணிலவ அணைக்கட்டுமா
உன்னை தள்ளி வச்சி பார்க்க
என்னால் முடியாதடி
என்னோடு நீ ஒட்டிக்கடி
உன் மனசில்
நான் எங்கே என்று
அறிந்து கொள்ள போட்டேனடி
ஓர் நாடகமடி
எவ்வளவு பாசம்
இவ்வளவையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தாயடி கள்ளி
மாமா நடிப்பிற்கு கூட
இப்படி பண்ணிடாதீங்க
இன்னைக்கு சொல்றன்
நீங்க இல்லாம நான் இல்ல மாமா
நீங்க இல்லா வாழ்க்க ஒன்னு
கெடையவே கெடையாது
நான் உசுர விட்ருவன் மாமா
பொய் சொல்லாதடி
என்ன எப்பயும் மொறச்சிட்டே இருக்க.
நீ எப்படிடி எனக்காக உசுர விட்ருவ
மாமா நான் போறன் மாமா
என்று கூறிவிட்டு
ஆற்றில் குதித்தாள்
அவளுக்கு நீச்சல் தெரியாது
நான் உடனே பின்னாலே கத்திக்கொண்டு ஓடி ஆற்றில்
குதித்தேன்
அடியில் மயங்கிக் கிடந்தாள்
தூக்கிக்கொண்டு
மேலே வந்து கிடத்தி
என் மூச்சை தந்து
என்னவளை எழுப்ப
அவள் மாமா மாமா என்று
முணகி கொண்டிருந்தாள்
மாமாவ நல்ல படியா பாத்துக்கோ கடவுளே...
என் மாமாவ பாத்துக்க நான் அங்க இல்ல.
நீ தான் பாத்துக்கணும்.
நான் இல்லாம என் மாமா
தனியா இருப்பாரு
அவர என்னவிட நல்லா பாத்துக்கற பொண்ணுகூட
சேத்து வச்சிடு கடவுளே...
அவர் எப்பயும் நல்லா இருக்கணும்...
நான் கண்டிப்பா
நரகத்ல என் மாமாவுக்கு பண்ண தொல்லைக்கு எல்லாம் தண்டன அனுபவிக்றன்.
என் மாமாவ எப்பயும் சந்தோஷமா பாத்துக்கோ கடவுளே...
என் மாமா இல்லாத சொர்க்கம் கூட
எனக்கு நரகம் தான்
அடியே
நீ உலர்னது போதும்
எழுந்திருடி
நான் எங்க இருக்கன்.
ஆங் ஏன் மடியில இருக்க
நான் இன்னும் சாகலையா
உன்ன அதுக்குள்ள சாகடிச்சிடுவனா
எனக்கு பண்ண தொல்லைக்கெல்லாம்
சேத்து வச்சி
எங்கூடவே உன்ன எப்பயும் ஒட்டி
வச்சிகிட்டு
அணு அணுவா உன்ன ரசிச்சியே சாகடிக்கப் போறன்டி
ஆமாம் அது என்ன
முணுமுணுத்த
" உன்னவிட என்ன நல்லா பாத்துக்கற பொண்ணு கூட ஒருத்தி இருக்காளா?"
மனசுலருந்து சொல்லு உண்மைய மறைக்காம...
நிச்சயம் இல்ல மாமா...
நானே போனதுக்கப்றம்
உங்கள பாத்துக்கறதுக்கு எப்படியா இருந்தாலும்
வாழ்க்கை துணை வேணுமில்ல...
அடி போடி பைத்தியக்காரி.
நீயே போய்டா.
என் வாழ்க்கையே போய்டுச்சி
அப்றம் எதுக்கு வாழ்க்க துணை...
அப்படிலான் சொல்லாதீங்க மாமா
நானே செத்துட்டாலும்
நீங்க அதுல இருந்து வெளிய வந்து சந்தோஷமா வாழணும்...
உன்னால முடியுமாடி
(காதை பொத்தி)
ஐயோ என்ன வார்த்தை சொல்லீட்டிங்க மாமா நீங்க.
வாய மூடுங்க.
(நெஞ்சை வலியில் பிடித்துக்கொண்டு)
நெஞ்சு வலிக்குது மாமா.....
மயங்கி மடியில் விழுந்துவிட்டாள்
நிலவின் ஒளியில்
ஓர் நிலவே என் மடியில்
வான் மேகமே மழை பொழிகிறது மனதில்
என் கைகளுக்கு வரமோ
அவளை வருடி கொண்டிருக்கிறது
மேலாக எனை அவள் விரல்களால்
இறுக்கிக் கொண்டிருக்கிறாள்...
மயக்கத்தில் இருந்து எழுந்திட்டாள்...
மல்லிகை வாசம் மனதை இழுத்தது
அழகான நிலவின்
இவ்விருட்டில்
அணைத்துக்கொண்டாள் என்னவள்
எனை விட்டு நீங்காமல்
இருக்கி அணைத்து கொண்டே இருந்தாள்
என் உடலில் ஈரமாக ஏதோ சிந்த உடனே துடைத்திட்டாள்
என்னடி என்று வினவ ஒன்றும் இல்லை
நீங்காமல் திரும்பாமல் அப்படியே இருங்க மாமா என்றாள்...
நேரங்கள் கடந்து கொண்டே சென்றன...
நிசப்தங்கள் அங்கு சூழ்ந்தது...
அவள் பிடி தளர்ந்தது
அவள் உடல் மிகவும் குளிர்ச்சியானது...
என்னில் இருந்து அவளை எடுத்து பார்க்க நினைத்து
தூக்குகையில்
ஒரு கொடி போல் சரிந்தாள்...
வாயில் நுரை தப்பிக்கொண்டும்
அதில் ரத்தமும் கலந்திருந்தது
என்ன நேர்ந்தது என்று நோக்குகையில் கையில்
பாம்பு கடித்த தடம் நிறைய
கண்டேன்...
இவ்வளவு நேரமாக அவள் உயிர் ஊசலாடி துடித்திருக்கிறது
நாடி நின்றிருக்கிறது
இதயம் வெடித்திருக்கிறது
எதுவும் அறியாமல் இருந்திருக்கிறனேடி
எனக்காக உன் உயிரையே தந்துவிட்டாயேடி
உனக்கு மட்டும் தான்
என் மடியில் இறக்க வேண்டும் என்ற
ஆசை இருக்குமா
எனக்கு இருக்காதாடி
நியாயமாக அந்த பாம்பு
என்னை தான் தீண்டியிருக்க வேண்டும்
நீ இருக்கும் இந்த இடத்தில் நானல்லவா உன் மடியில் கிடந்திருக்க வேண்டும்
இப்படி செய்து விட்டு
எனை தனியே புலம்ப விட்டாயேயடி
உன்னோடு பல ஆண்டுகள்
சேர்ந்து உன் கை கோர்த்து
பிண்ணிப் பிணைந்து
வாழ வேண்டுமென்று இருந்தேனடி...
என்னை இப்படி உயிரோடு
கொன்று விட்டு சென்றாயேடி
இவை எல்லாம் கனவாய்
இருக்கக் கூடாதா
என் மடியில் நீ
உயிராய் இருக்கக் கூடாதா
இருடி
நானும் வருகிறேன்
உன்னோடு சேர்ந்து வாழ வருகிறேன்...
என் அர்ணாக்கயிறை அவிழ்த்து
அவளோடு என்னையும் சேர்த்து கட்டி அணைத்து கொண்டு
எழுந்து ஆற்றை நோக்கி நடந்து
ஆற்றில் அவளும் நானுமாய் விழுந்தோம்.....
மூச்சு முட்டுகிறது
பேச்சு மூச்சின்றி கிடக்கும் அவளை
இறுக அணைத்து முத்தமிட்டுக் கொண்டே
ஆற்றின் அடியில்
இருவரும் அணைத்துக்கொண்டே படுத்துவிட்டோம்.....
~ பிரபாவதி வீரமுத்து
***********************************
இனிமையாக முடிக்க வேண்டுமென்றால்
தலைவனின் வருகைக்காக
காத்துக்கொண்டிருக்கும் தலைவி .
தலைவனை நினைத்து
ஆத்தங்கரையில் நிலவை பார்த்துக் கொண்டே கண் அயரும் பொழுது
கனவிலும் தலைவனையே நினைத்து கொண்டிருக்க
கனவிலும் தலைவனே.
கனவில் நிகழ்ந்த சொப்பணமே அவை.
ஆத்தங்கரை ஓரத்துல
அந்த சாயும் நேரத்துல
முல்லைக் கொடி
கரையில் மாமனையே
நினைத்து கிடக்க
மாமன் ஒளிந்து மறைந்து வந்து
அருகில் வந்து
சொல்லாமல் அணைத்துக் கொள்ள
அவளும் அணைத்துக்கொண்டாள்
சுமந்து கொண்டாள் மடியில்
தலை சாய்ந்து கொண்டாள்
மாமன் மார்பில்
மாமன் மார்பில் சாய்ந்து கொண்டே சொன்னாள்
இப்படியே இருவரும்
இருந்து விடலாம் மாமா
வேறு எதுவும் வேண்டாம்
இந்த நொடி நீளட்டும் மாமா
தென்றல் தீண்டும் இரவும்
ஆற்றங்கரை நிலவும்
அந்திமப்பூக்களும்
மலர் சொரியும் மரங்களும்
இப்படியே இருக்கட்டும் மாமா
வானம் இப்படியே இருளாக நிற்கட்டும்
நேரம் நகர வேண்டாம் மாமா
உங்கள் மார்பிலிருந்து நான் எழவே வேண்டாம் மாமா
உன்னோடு நூறு சென்மம் சேந்து வாழணும்
உன் மடியில் எப்பொழுதும்
கண் மூடணும் மாமா
ம்ம்ம் சரிடி
~ பிரபாவதி வீரமுத்து