முதிர் கன்னி

முதிர் கன்னி...

வண்டுகள் வந்து பார்த்துச்
சென்ற
பூவாக
நான்...

எறும்புகள் கரும்பை
கண்டும் காணமல்
சென்ற
காட்சிப் பொருள்
நான்....

மாதம்
ஒரு
மாப்பிள்ளைக்கு....

பெண்
பார்க்க
வருபவரை
கணவன்
இவன்
தானோ
என்று
அலங்கிரித்து
பின்
அழுத்த
நாட்கள்.........

வீட்டுக்
கண்ணாடியும்
என்
கதை
சொல்லும்.......

தலையனையும்
என்
கண்ணீரை
கண்டு
கண்னீர்
வடிக்கும்.......

வெறுத்த
மனம்
இரண்டாச்சே....

வெற்றுக்
காகிதம்
தேவையில்லாமல்
போய்விடுமோ.....

வாசமில்லா
மலரா
நான்
இல்லை
தேன்
இல்லா
பூவா
நான்....

கண்டவரெல்லாம்
எதை
கண்டுப்
பிடிக்கவில்லை
என்றனர்......

ஜாதகம்
சதி
செய்ததோ
இல்லை
என்
விதியே
இதுவானதோ....

அவள் ஒரு தொடர்கதையா
நான்
இல்லை
முடிவில்லா பெருங்கதையா......

எழுதியவர் : கா.திவாகர் (29-Aug-16, 1:01 am)
சேர்த்தது : திவாகர்
Tanglish : mudhir kanni
பார்வை : 318

மேலே