மாணவன்

ஆயிரம் கனவுகளுடன் கல்லூரியில்,
காலடி எடுத்து வைக்கும்
கூட்டுப் புழு பருவம் நீங்கள்......

பட்டாம் பூச்சியாய் பறக்கத் துடிக்கும் உங்களுக்கு,
வர்ணம் தீட்டும் கடமை எங்களுக்கு!

மனதில் நல்லதை விதை,
நல்ல 'விதை' விதைத்தால்...
வானளவு வளருவாய் விருச்சமாய்,
கோடி மக்கள் இளைப்பாற !

மாணவன் நினைத்தால்,
மாற்றி அமைக்கலாம் சமுதாயத்ததை
உன் பெருமை நீ அறியாய் ...

வானம் தொடுவதும் ,
கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பதும்
நச்சத்திர கூட்டங்களை எண்ணிடும்
அளப்பரிய ஆற்றல் உனக்குள் உண்டு

ஒவ்வொரு மாணவனும் ஒரு கவிதைதான்.....
கவிதையில் நல்ல கவிதை , கெட்ட கவிதை என்று உண்டோ?

பட்டி தீட்டாத வைரக் கல் நீ,
பட்டை தீட்டும் பெருமை எங்களுக்கு!

ஏன் இப்படி... .. ஏறப்பா......
உன்னை ஏற்றும் ஏணிப்படி நாங்கள்!!

ஒவ்வொரு மாணவனும் நச்சத்திரமாய்,
நாளைய உலகில் ஜொலித்திட,
உங்கள் ஆசிரியர்களின் வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : (28-Aug-16, 10:15 pm)
சேர்த்தது : USHA MD
Tanglish : maanavan
பார்வை : 57

மேலே