வாழ்க்கை என்ற புத்தகத்தில்
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கை என்ற புத்தகத்தில் வாலிபம் எனும் பாடத்தை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் வாலிப வயதில் மட்டுமே உடல் சக்தி அதிகமானதாக காணப்படும்.
வெற்றி என்ற இலக்கை நோக்கி செல்லும் பயணம் என்றும் தொடர வேண்டும். ஏனெனில் செல்லும் பயணத்தில் பல மேடு பள்ளங்களை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஒரு மனிதன் தனது கடின உழைப்பால் வெற்றி இலக்கை அடைந்து கொண்டால் போதும் சக மனிதர்கள் அவன் மீது பொறாமை கொண்டு விடுவார்கள்.
விரோதிகள் என்ற பெயரில் பல துரோகிகள் வெற்றி பயணத்தில் எம்முடன் இணைந்துக் கொள்ள விரும்புவார்கள். ஆனால் அவர்களை ஒருபோதும் இணைத்து விடக்கூடாது !
“வெற்றி எனும் யுக்தி உன்னை மாற்றும் சக்தி” என்ற தலைப்பில் நமக்கு நாமே அறிவுரைகள் கூறி சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். அப்போது தான் வெற்றி எம் வசமாகும்.