மனம் கொண்ட தயக்கம்
மனம் கொண்ட தயக்கம், மறதியில் சென்ற பயணம் இடைவிடா தருணம், நின்ற இடமெல்லாம் தனிமை, மோகம் கொண்டதெல்லாம் பகைமை என்பதெல்லாம் உண்மை !
வாலிபம் என்ற காவியம், வாழ்க்கை எனும் ஓவியம் அதில் வரையப்பட்ட முதல் ஓவியம் இளமை எனும் காவியமாகும் கனவில் காணும் காட்சியல்லாம் நிஜமானதாக மாறுவதில்லை !
பெண்ணைப் பார்த்தால் காமம், கண்ணைப் பார்த்தால் மோகம், பொறுமை என்ற பெயரில் பொறாமை கொள்ளும் மனிதன் இறைவனின் பார்வையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது !
நாட்கள் என்ற பெயரில் காலை, பகல், மாலை, இரவு போன்ற அத்தியாயங்கள் அடங்கியுள்ளது என்பதை போன்று மனிதனின் வாழ்விலும் இளமை, முதுமை இவ்விரண்டும் அடங்கியுள்ளது.
காலம் மாறுவதென்பது இயற்கை ஆனால் மனிதன் மாறுவதென்பது செயற்கை என்பதே உண்மை எனவே இறைவனை மறந்து ஆணவத்தில் ஆட்டம் போடுவதெல்லாம் அற்பமாகும்.