இளமையிலும் துன்பம், முதுமையிலும் துன்பம்

வாழ்க்கை என்ற கட்டிடத்தில் மாடி எனும் கஷ்டம், நஷ்டம், துன்பம், இன்பம் போன்ற படிகளை ஏறி சென்று தான் வாழ்க்கையின் இலக்கை மனிதனால் அடைந்துக்கொள்ள முடியும்.

தனிமையில் அமர்ந்து, வாழ்க்கையில் நிமர்ந்து, எண்ணத்தை சரியாக உணர்ந்து சரியான முறையில் வாழ்க்கை எனும் கட்டிடத்தை சக்தி வாய்ந்த கட்டிடமாக கட்டிமுடிக்க வேண்டும்.

இளமையிலும் துன்பம், முதுமையிலும் துன்பம் ஆனால் விரும்புவதெல்லாம் இன்பம் என்பது மனிதனின் எண்ணம், முதலில் உள்ளம் எனும் அஸ்திவாரம் சரியானதாக அமைந்திருக்க வேண்டும்.

கஷ்டங்களை கடந்து, பல நஷ்டங்களுக்கு முகம் கொடுத்து நம்பிக்கையை இழக்காத மனிதன் நிச்சயமாக ஒருநாள் இழந்த அனைத்தையும் ஒரு மடங்கு அதிகமாகவே சம்பாதித்துக் கொள்வான்.

விடா முயற்சி உனக்கு சூழ்ச்சி செய்யும் கயவர்களை வீழ்ச்சி கொள்ள வழிவகுத்திடும் என்பதை நீ எப்போதும் மறந்து விடாதே ! ஏனெனில் நம்பிக்கை என்பது உனக்கான சக்தியாகும்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (29-Aug-16, 7:37 am)
சேர்த்தது : அப்துல் ஹமீட்
பார்வை : 68

மேலே