உன்னை மாற்று உலகை போற்று

உன்னை மாற்று உலகை போற்று என்று நேற்று கூறின கூற்றை உண்மையாக்கு, வாழும் காலம் துரத்தும் சோகம் அதை வெறுக்கும் உள்ளம் மோகத்தை விரும்பியதன் நோக்கம் புரியாத மயக்கம்.

பணத்தின் தாக்கம் மனிதனின் மயக்கம் நல்லதிற்கு தயக்கம் பேசுவதெல்லாம் வியக்கம் விரும்புவதெல்லாம் ஆசை எனும் தாகம் தீராத நேரம் தலைக்கேறியது ஆணவம்.

சொல்லும் வில்லும் மனிதனை கொல்லும் ஆயுதம் என்றே கூறு ! வித்தைக் காட்டும் மனிதனுக்கு மெத்தைக்கூட ஆயுதம் தான் என்பதை அறியாத மனிதன் மடமையில் தூங்கியவனே

சிகரத்தைத் தொடும் பேச்செல்லாம் உன்னை சுடும் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல வறுமையின் கொடுமை அறியாத மனிதன் செல்வம் தான் சுவர்க்கம் என்று மயங்கிவிடுகிறான்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (29-Aug-16, 8:52 pm)
பார்வை : 106

மேலே