கடற்கரைக் காவாலிகள்

சேற்று நிறமுள்ள, முதலைகள் நிறைந்த, 38 கி.மீ நீளமுள்ளது பென்தொட்டை ஆறு. ஆற்றின் இருகரையோரமும் பறவைகளும்;, குரங்குகளும்; சுதந்திரமாக வாழும் அழகான இயற்கைச்சூழலைக் கொண்டது. கொழும்பிலிருந்து 62 கிமீ தூரத்தில் ஆற்றின் பெயரால் அமைந்த கிராமம் பென்தர என்று சிங்களத்தில் அழைக்கப்படும் பென்தோட்ட. ஒரு காலத்தில் கிராமமாயிருந்து படிப்படியாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வளர்ச்சஜ பெற்று தற்போது சுமார் ஐம்பதாயிரம் மக்களை உள்ளடக்கிய பெரிய ஊராகி வளர்ந்துவிட்டது. அழகான கடற்கரையே அக்கிராமத்தின் வளர்ச்சிக்கு துணைபோகிறது. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இக்கிராமத்தை ஆட்சி செய்து அதன் வளர்ச்சிக்கு காரணமாகயிருந்தார்கள் என்கிறது வரலாறு. 1798க்கு பின்னர் பிரித்தானியர் ஆட்சிகாலத்தில்;, பிரித்தானிய அதிகாhரிகள் உல்லாசமாக நேரத்தைக் கழித்த கிராமம், பென்தொட்ட.

கிராமத்தில் வாழும் குடும்பங்கள் எல்லாம் வசதி படைத்த குடும்பங்கள்; என்று சொல்ல முடியாது. கடற்கரை ஓரமாயுள்ள ஹோட்டல்களில் எதாவது ஒரு வேலை செய்து பல கிராம வாசிகள் பிழைப்பை நடத்தினர். அக்கிராமத்துச் சிறுவர்களுடன் அந்நியொன்னியமாக பழகியவன் சுரேந்திரா என்ற இருபத்தைந்து வயது சிங்கள இளைஞன். அவன் சிறுவர்களோடு சினேகிதமாகப் பழகியது தீய நோக்கத்தோடு என்பது பலருக்கு தெரியும். சுரெந்திர மாமா என்று சிறுவர்கள் அவனை அழைப்பர். ஆனால் அவனைத் தட்டிக்கேட்கவோ அல்லது கிராமத்துக்குள் தலை காட்டாதே என்று கட்டளையிடவோ அவர்கள் தயங்கினர். காரணம் அவன் பென்தோட்ட பொலீஸ் அதிகாரிகளை அவன் கையுக்குள் வைத்திருந்ததே. அவனது போதை மருந்து விற்பனை, சிறுவர்களை உல்லாசப்பயணிகளுக்கு அறிமுகம் செய்து பணம் சம்பாதிப்பது போன்ற தீய செயல்கள் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பங்கு பொலீஸ் அதிகாரிகளுக்கு போய்ச்சேர்ந்தது. திட்டமிட்டு உல்லாசப் பயணிகளை கிராமத்து சிறுவர்களோடு சிற்றின்பத்தில் ஈடுபடவைத்து, அந்த குற்றத்துக்காக கைது செய்யாது விடுவதற்கு பெருந்தொகை பணத்தை அவர்களிடமிருந்து பெற்று, சுரெந்திராவும் அதிகாரிகளும் பங்குபோட்டுகொண்டது பல ஊர்வாசிகளுக்கத் தெரிந்திருந்தும் “எமக்கேன் இந்த வம்பு” என பேசாது இருந்தனர்.

காலி நகரின் வெளிப்புறத்தில் உள்ள “உனவட்டுன” என்ற மூலிகைகள் நிறைந்த கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன் சுரெந்திரா. சிறுவனாக இருக்கும் பேர்து அவன் ஆரம்பக் கல்வியை காலி ரிச்மண்ட் கல்லூரியில் கற்றதினால் ஆங்கிலத்தைச் சுமாராக அவனால் பேச முடிந்தது. காலியில் இரத்தின கல் வியாபாரம் செய்யும் முஸ்லீம்களுடன் பழகியபடியால் ஒருரளவுக்கு தமிழ்; பேசவும்; கற்றுக்கொண்டான்;. பதினாறு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தோடு சச்சரவு பட்டுகொண்டு வெளியேறிய சுரெந்திரா, பிழைப்புக்கு வெளிநாட்டு உள்ளாசப் பயணிகளை நம்பி வாழ்ந்தான். போதை மருந்து கடத்தல் வியாபாரத்தில் அவனது ஈடுபாடு அதிகமாக இருந்தது. காலியை விட பென்தோட்டாவில் ஹோட்டல்கள் அதிகம் என்பதை உணர்ந்த சுரெந்திரா, தனது வியாபாரத்தை கடலோரக் கிராமத்துக்கு இடமாற்றினாhன். போதை மருந்தை விட ஐரொப்பா, அமெரிக்கா, ஆவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலி இருந்து வந்த வெளிநாட்டு உல்லாச பயணிகள் சிலர்;; தமது ஒரேபால் சிற்றின்பத்திற்காக இரை தேடிய போது சுரேந்திரா பல சிறுவர்களை பலியாக்கினான்.

அவனது சந்திப்பில், அவனைப் போல் சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு தன்னிச்சையாக சம்பாதிக்க தொடங்கியவன் சந்திரன் என்ற சந்திரசேன. பிறக்கும் போதே சந்திரனைப்போல் பிரகாசமான முகத்தை கொண்டவன். அதனால் தானோ என்னவோ அவனது தாய் சுதுகாமி அவனுக்கு அந்த பெயரைச் சூட்டினாள் போலும். அவனை பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அழகான தோற்றமும், தாயைப்போல் சிவந்த மேனியும். பார்த்தவர்களைக் கவரும் பார்வையும், புன்சிரிப்பும் உடையவன். இவன் வளர்ந்தால் சினிமாவில் சேரலாம் என்று பலர் விமர்சித்தனர். எவரும் அவனை இலங்;கைவாசி என்று பார்த்தவுடன் சொல்லமாட்டார்கள். அவனது மூதாதையர் அப்பகுதியை ஒரு காலத்தில் ஆண்ட ஒல்லாந்தரோடு கலப்பு திருமணம் செய்ததினால் அந்நிறம் வம்சவழியாக தோன்றியிருக்கலாம் என்பது கிராமத்து மக்களின் ஊகமாகும். சந்திரசேன சிங்களத்தோடு சேர்ந்து சில ஆங்கில சொற்களையும் பேசப் பழகியிருந்தான்.

சுதுகாமியின் கணவன் பண்டா பென்தோட்ட ஆற்றில் படகோட்டி பிழைப்பவன். சுற்றுலா பயணிகளைப் படகில் ஏற்றி இயற்கையின் அழகை சுற்றிகாட்டி பணம் சம்பாதிப்பான். ஒரு நாள் பயணிகளை ஹோட்டலில் இறக்கிவிட்டு தனது படகில் வீடு திரும்பும் போது படகு கவிழ்ந்து பண்டா ஆற்று முதலைகளுக்கு இறையானான். அவனது சடலத்தை கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. அவனது மறைவு சுதுகாமிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கூலி வேலை செய்து தனது மகளையும் மகனையும் வளர்த்தாள். மகன் சந்திரசேனனுக்கு வயது பதினான்காக இருக்கும் போது சுரெந்திரனின் நட்பு அவனுக்கு கிட்டியது. சந்திராவின் தோற்றத்தை கண்ட சுரேந்திரனுக்கு தனது வியாபாரத்துக்கு தான் எதிர்பார்த்த பார்வைக்கு தோற்றமுள்ள ஒரு நல்ல இரை கிடத்துவிட்டது என்ற எண்ணம் தோன்றியது. அதுவே சந்திராவுடன் இறுகிய நட்பை உருவாக்கியது.

சந்திரனுக்கு போதை மருந்தின் சூட்சுமத்தை அறிமுகப்படுத்தி அவனை தனது விருப்பத்துக்கு செயல்பட செய்தான் சுரேந்திரா. அதுவே சந்திரா பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்துவதற்கு காரணமாகயிருந்தது. படிப்படியாக கை நிறைய பணம் அவனுக்கு கிட்டத் தொடங்கியது. சந்திராவின் போக்கு மாறத்தொடங்கியது. சிலநாட்கள் வீட்டுக்கு வராமல் இருந்துவிடுவான். வீடு திரும்பும் நாட்களில் தாய் சுதுகாமி “ சந்திரா இவ்வளவு நாட்களும் எங்கே போய் இருந்தாய்?. பலர் உன்னை பற்றி பல விதமாக பேசுகிறார்கள் உண்மையா ? என்று விளக்கம் கேட்டாள்.
“ என்ன அவர்கள் என்னைபற்றி பேசுகிறார்கள்?”
“ நீ அனேகமாக வெளிநாட்டவர்களுடன,; அதுவும் பெண்குளுடன் சுத்தித்திரிவதாக.”
“ எனக்கு மற்றவர்களுடைய விமர்சனத்தில் அக்கரையில்லை. அவர்களுக்கு நான் பணம் சம்பாதிப்பதைக் கண்டு எரிச்சல்.”
“ சந்திரா வெளிநாட்டவர்களோடு பழகுவதில் கவனமாக இரு. அவர்கள் சுயநலவாதிகள்” “அம்மே உனக்குத் தேவை காசு தானே. நான் யாரோடு பழகினால், எங்கே போயிருந்தால் உனக்கென்ன? இதோ நீ கண்டிராத அளவுக்கு தேவையான காசு“ என்று ஐயாயிரம் ரூபாய் பணத்தைத் தாயிடம் நூறு ரூபாய் நோட்டுகளாய் அள்ளி கொடுத்தான். தாயும் வாயடைத்துப் போனாள். அவ்வளவு பணத்தை அவள் ஒருபோதும் கண்டதில்லை மகனுக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது அவளுக்கே புதிராக இருந்தது.

“ எப்படியடா உனக்கு இந்தப் பணம் வந்தது?. எங்கேயும் திருடினாயா“ தாய் விசனத்தடன் கேட்டாள்.

“ உனக்கு என்ன பயித்தியமா?. நான் ஏன் திருடவேண்டும். என் யாலுவா ( நண்பன்) சுரெந்திரனின் உதவியோடு ஒரு பெரிய ஹோட்டலில் வேலை செய்கிறன். அவனுக்கு ஹோட்டலில் பலரைத் nரியும். அங்கு வாழ்க்கையை அனுபவிக்க பல நாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகள் வருவார்கள். அவர்களை எனக்கு சுரேந்திரா அறிமுகப்படுத்தி வைப்பான்”

“ ஹோட்டலிலை இவ்வளவு பணம் சம்பளமாய் தா அப்படி என்ன வேலை செய்கிறாய்?. விலையுயர்ந்த உடுப்புகள் போடுகிறாய். உன் கையில் கடிகாரம் வேறு கட்டியிருக்கிறாய். இதுக்கெல்லாம் உனக்கு ஏது சந்திரா பணம்?”

“அதேன் உனக்கு. கைக்டிகாரம் எனக்கு என்றை சேவைக்காக ஒரு வெளிநாட்டு பெண்மணி இனாமாகத் தந்தவ. இந்த சேர்ட் இடங்களை சுற்றி காட்டியதற்காக பரிசாக ஜெர்மன் காரர் ஒருவர் தந்தவர். அதுமட்டுமா ஒரு அவுஸ்திரேலியாக்காரர் ஹோட்டலை விட்டு; போகும் போது அவர் வைத்திருந்த இந்த ரேடியோவைத் தன் நினைவாக தந்திவிட்டு போனார்” என்ற தான் வைத்திருந்த பொக்கட் ரேடியோவை எடுத்துக்காட்டினான்.

அவனது தங்கை மல்லிகா அதை ஆச்சரியத்துடன் பார்த்து; “ எனக்கு அந்த ரேடியோவைத் தாவேன் அண்ணா. எனக்கு பாட்டு கேட்க பிடிக்கும் என்று உனக்குத் தெரியும் தானே”

“ரேடியோ கேட்க எனக்கு எங்கே நேரம். உனக்கு இது என்பரிசாக வைத்துக்கோள்.” என்று தமையன் சொன்னபோது மல்லிகா பூரிப்படைந்து போனாள். தன் தமையனையிட்டுப் பெருமைப் பட்டாள். சிறு வயதிலேயே இவ்வளவு சம்பாதிக்கிறானே. தானும் தமையன் செய்யும் தொழிலைச் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது ஆனால் தன் ஆசையை வெளிப்படையாக கட்டுப்பாட்டுள்ள தாயுக்கு முன் எடுத்துச் சொல்லப் பயந்தாள். சமயம் வரும் போது அண்ணாவின் நண்பன் சுரேந்திராவை பிடித்தாவது ஹோட்டலில் வேலை ஒன்று எடுக்க வேண்டும் எனத் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.
“வெளிநாட்டவர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா? கை நிறையப் பணம் வைத்திருக்கிறார்கள். என்னோடு அன்பாக பழகிறார்கள். சமயம் வரும் போது தங்கள் நாட்டுக்கு கூட்டிப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்” என்று அவர்களைப் பற்றி புகழ்பாடினான் சந்தின். சுதுகாமிக்கு மகன் சொல்வதை கேட்க வெறுப்பாகயிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் தனது சகோதரி நிமன்திக்காவோடு உடலுறவு வைத்து, திருமணம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டுப் போன வெளிநாட்டவன் ஒருவனின் கதை சுதுகாமிக்கு நினைவுக்கு வந்தது. அதுவே சகோதரி தூக்கு போட்டு உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்குப் போனதை அவள் அறிவாள். சகோதரியை இழந்தபிறகு வெளிநாட்டவர்களைக் கண்டாலே அவளுக்கு வெறுப்பு.

******

காலம் போகப்போக சந்திரா வீட்டுக்கு வருவது குறைந்துவிட்டது. ஆனால் பணத்தை மட்டும் தாயுக்குத் தெரிந்தவர்கள் மூலம் அனுப்பிவைத்தான். தான் நேரடியாகத் தாயை பார்த்தால் அவள் தான் செய்யும் வேலையைப் பற்ற கேள்வி மேல் கேள்விகள் கேட்பாள் என்பதினால் முடிந்தளவு வீட்டுக்குப் போவதை தவிர்த்தான். பல மாதங்கள் கழித்து டிசம்பரில் ஒரு நாள் மகன் தீடிரேன்று சுதுகாமிமுன் வந்து நின்ற போது அவள,; அவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். மகனின் தோற்றத்தில் ஏற்பட்டிருந்து மாற்றம் அவளை பயத்தில் ஆழ்த்தியது. அவனது திடகாத்திரமான தோற்றம் போய் உடல் மெலிந்திருப்பதை சுதுகாமி அவதானித்தாள்.

“ சந்திரா எனக்கு என்ன நடந்தது. ஏன் இப்படி மெலிந்துவிட்டாய்.? நேரத்துக்கு சாப்பிடுவதில்லையா. வீட்டுக்கு கூட அடிக்கடி நீ வருவதில்லை. வந்திருந்தால் உனக்கு பிடித்த உணவைச் சமைத்து தந்திருப்பேன். மல்லிகா கூட அடிக்கடி உன்னை ஞாபகப்படுத்துவாள்.” என்று விசனப்பட்டாள்.

“ எனக்கு ஒன்றுமில்லையம்மா. அடிக்கடி காய்ச்சல் வருகிறது. நேறி போடுகிறது. சாப்பிட மனமில்லை. அது தான் மெலிந்துவிட்டேன். இப்போ எனக்கு எவ்வளவோ தேவையில்லை” உண்மையை மறைத்தான்.

“அது சரி ஆஸ்பத்தரிக்குப் போய் உன்னை காட்டினாயா? டாக்டர் என்ன சொன்னார்?”

சந்திரன், தாயின் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினான். எனக்கு எயிட்ஸ் வியாதி ஆரம்பக்கட்டத்தில் இருக்குது என்று இரத்தப்பரிசோதனை மூலம் டாக்டர் கண்டு பிடித்ததை அம்மேயுக்கு எடுத்துச் சொல்லமுடியுமா?. அவளுக்கு அந்த வியாதியின் விளைவையும் கோரத்தையும் பற்றி என்ன தெரியப்போகுது. வியாதிபற்றிய விபரத்தைச் சொல்லி நான் ஏன் அவளுக்கு கவலையை உண்டு பண்ணுவான். மல்லிகாவுக்கு கூட விளங்குமோ தெரியாது. அம்மேக்கு தெரிந்தால் அவள் ஊர் ஆயர்வேத வைத்தியரிடம் விபரம் சொல்லி மருந்து கேட்பாள். என்னையும் வற்புறுத்தி அவரிடம் அழைத்துப் போவாள். அது போதும் ஊர் முழவதும் என்வருத்தத்தை பற்றி பறை சாற்ற. அதாலை மல்லிகாவுக்கு திருமணம் கை கூடாமல் போய்விடும். தமையனுக்கு எயிட்ஸ் வியாதி என்று கேள்விப்பட்டால் எவ்வளவு பணம் நான் கொடுத்தாலும் எவரும்; அவளை மணமுடிக்க முன்வரமாட்டார்கள். சிந்தனையில் ஆழந்துவிட்ட அவனுக்கு தாயின் கேள்விக்கு உடனே பதில் சொல்லமுடியாது போய்விட்டது.

“ திரும்பவும் கேட்கிறன் டாக்டர் என்ன சொன்னார். என்ன வியாதியாம்?” தாய் திரும்பவும் கேட்டாள்.

“ பயப்பட ஒன்றுமில்லையாம். எனக்கு நடுக்கத்தோடு காய்ச்சல் வருவதற்கு காரணம் மலேரியாவாம். நல்ல மருந்து தந்திருக்கிறார். சுகமாகிவிடும் என்றார். நீ ஒன்றுக்கும் பயப்படாதே” என்று முழப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைத்தான் சந்திரா

“ ஏதோ பார்த்து நடந்துகொள். உன் உடம்பு நல்லாய் இருந்தால் தான் நீ உழைக்கலாம்:”
தாயின் வற்புறுத்தலின் பேரில் மூன்று நாட்கள் வீட்டில் தங்கினான் சந்திரன். அதுக்கிடையில் அவனைத் தேடி சுரெந்திரன் வீட்டுக்கே வந்துவிட்டான்.

” அம்மே எனக்கு கிறிஸ்மசுக்கு ஹோட்டலிலை சரியான வேலையிருக்கு. சுரெந்தரும் எனக்காக என்னைக் கூட்டிப்போக வந்திருக்கிறான். நான் புது வருடத்துக்குப் பிறகு திரும்பி வந்து உன்னைப் பார்க்கிறேன். உன்செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக்கொள். உன்செலவுக்கு உதவும் “ என்று நோட்டுக் கற்றையை அவள் கையுக்குள் திணித்து விட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் சுரெந்திரனோடு மறைந்துவிட்டான். மகன் போன வழியைப் பார்த்தபடியே சுதுகாமி ஏங்கி நின்றாள்.

******

;தாஜ் ஹோட்டலில் நத்தார் தின இரவன்று ஓரே கூட்டம். அனேகமானோர் வெளிநாட்டவர்கள். தாராளமாக உணவும் மதுவும் பரிமாறப்பட்டது. ஓரத்தில் பைவா நடனம் பலர் ஆடிக்கொண்டிருந்தனர். சந்திரா மட்டும் தனது சுவிஸ் தேசத்தவனோடு ஏதோ கணவன் மனைவி போல் அணைத்தபடி அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். இரவு பத்துமணியானதும் இருவரும் எங்கு போனார்களோ தெரியவில்லை.

நத்தாருக்கு அடுத்த நாள் காலை சுரெந்திரா சந்திராவை அழைத்துக் கொண்டு; போதை போகக் கடலில் குளிக்கச் சென்றான். கடற்கரையில் அவர்கள் போன நேரம் கடல் சற்று அமைதியாக இருந்தபடியால் குளிப்பதற்கு ஏதுவாக இருந்தது. ஜனக் கூட்டம் அதிகமாக இருக்கவில்லை. வெகு தூரத்தில் இரு மீன் பிடிவள்ளங்களில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தனர்.
“வெய்யில் ஏற முன்னரே குளித்துபோட்டு போவாம் வா“ என்றான் சந்திரா.

“ கொஞ்சம் பொறு. நான் உனக்கு அறிமுகப்படுத்தாத வெள்ளையர்கள் யாரவாதும் குளிக்க வந்திருக்கிறார்களா பார்ப்போம்“ என்றான் சுரெந்தரன். அவன் கண்கள் அன்றைய பிஸ்னசுக்கு ஆட்களைத் தேடியது. கடலின் கரையோரத்தில் இருந்து சுமார் நூற யார் தூரத்தில் குளித்துக்கொண்டிருந்த சந்திராவுக்கு எதோ அதிசயம் நடப்பது போல் இருந்தது. கழுத்தளவில் இருந்த தண்ணீர் படிப்படியாக வற்றி கடல் பின் வாங்குவதை அவதானித்தான். கடல் நீர் வற்றியதால் மீன்கள் துடிக்கத் தொடங்கின.

“ சுரென் ஓடிவா மீன் பிடிக்கலாம் “ என்று நண்பனை அழைத்தான் சந்திரா. பல வெளிநாடட்வர்களும் அவர்களது பிள்ளைகளும் வற்றிய கடலில் துடிக்கும் மீன்களை பிடித்தனர். சந்திராவுக்கும் சுரெந்திராவுககும் கடலின் அலைகள் பின்வாங்கியது வினோதமாக இருந்தது.

அமைதிக்கு பின்னர் புயல் என்பது போல் தீடிரென கடல் குமுறி நூறடி உயரத்துக்கு பேரலைகளாக தோன்றத் தொடங்கியது. அவ்வலைகள் கரையை நோக்க விரைவாக வரத்தொடங்கின. வாழ்நாளில் ஒருபோதும் பென்தோட்டை கடல் அலைகள் இப்படி உயரமாக இருந்ததில்லை. கடற்கரையில் நின்றவர்கள் “சுனாமி” வருகுது என்று கூக்குரல் இட்டுக்கொண்டு கரையை நோக்கி பதறியடித்துக் கொண்டு ஓடித் தொடங்கினர். பலருக்கு சுனாமி என்றால் என்ன என்று புரியவில்லை. வானத்தில் பறவைகள் எதையோ கண்டு மிறண்டு சத்தம் போட தொடங்கின. கரையில் நின்றவர்கள் சுனாமி என்று எதை குறிப்பிடுகிறர்கள் என்பது சந்திராவுக்கும் சுரெந்திரனுக்கும் புரியவில்லை. பொறுக்கிய மீன்களை கிழே அப்படியே போட்டுவிட்டு தலையைத் தூக்கிபார்த்தபோது தங்களை நோக்கி பெரும் இரைச்சலோடு வேகமாக வரும் அலையைக் கண்டு இருவரும் பயந்துவிட்டனர். இருவருக்கும் நீந்தத் தெரிந்தாலும் அந்த பேரலையை சந்திக்கும் தைரியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

“வா சந்திரா அலை வரமுன் கரைக்கு ஓடுவோம்” என்று அவன் கையை பிடித்துக் கொண்டு ஓட எத்தனித்தான் சுரேந்திரா. அதற்கிடையில் சக்திவாய்ந்த அலையின் உயரம் அவர்களை சுழற்றி அமி;ழ்த்;திவிட்டது. அங்கிருந்த பலர் முச்சு திணரிப்போனார்கள். உதவி கேட்டு பலரின் கூக்குரல்கள் அலையின் இரச்சலில் புதைந்துபோயிற்று. முதலாவது அலையைத் தொடர்ந்து இரண்டாவது அலையானது உயரமாகவும் சக்திவாயந்ததாகவும் இருந்தது. அதை தொடர்ந்த பல அலைகள் எதிர்பாராத விதமாக திடீரென்று ஒன்றின் பின் ஒன்றாக வந்தன. அலைகள் தாஜ் ஹோட்டலின் இரண்டாவது மாடி உயரத்துக்கு கடல் நீரை எடுத்துச்சென்றது. மக்களின் அவல ஓலங்களை காற்று தழுவியது. கடலில் குளித்துக்கொண்டிருந்த எல்லோரையும் பாகுபாடின்றி, கடல் அலைகள் திரும்பிக் கடலுக்கு செல்லும் போது அலையேர்டு உறிஞ்சி எடுத்துச் சென்று விட்டது. அக் கூட்டத்தில் சந்திராவும் சுரேந்திராவும் உள்ளடங்குவர். கடல் அலைகள் கடலோரத்தில் சுமார் அரை மைல் தூரம் பாதையையும் கடந்து உள்ளே ஆக்கிரமித்துவிட்டது. படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்புவதற்கு பல மணி நேரம் எடுத்தது. எங்கும் பிணங்களும், உடைந்த ஹோட்டல் மேசைகள் , கதிரைகள் மற்றும் பொருட்கள். முறிந்த மரங்கள், சிதைந்து காட்சியளித்தது. பென்தோட்ட கிராமத்தின் வரலாற்றில் அதுவே முதல் தடவை அப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. பென்தோட்ட மட்டுமல்ல பல இலங்கையின் வடக்க, கிழக்கு தெற்கு தென் மேற்கு ;பகுதிகளில் உள்ள கடலோர ஊர்களும்; பாதிக்கப்பட்டு சுமார் 36000 க்கு மேலான உயிர்களை கடல் பழிவாங்கிவிட்டது என்ற செய்தி பிறகு தான் மெல்ல மெல்லக் கசிந்து வந்தது. பல வாகனங்களை அலைகள் கடலுக்குள் அடித்துச் சென்று விட்டது.

சந்திராவுக்கும் சுரேந்திராவுக்கும் அவர்களது நடத்தைக்கு இயற்கை அளித்த தீர்ப்பு விசித்தரமானது. ஏயிட்ஸ் வியாதியானது சந்திராவுக்கு மரணத்தை தழுவவைத்து அவனது குடும்பத்துக்கும் உள்ளூர் வாசிகளுக்கு அவன் எந்த வியாதியால் இறந்தான் என்று தெரியாமல். கடலன்னை அவனையும் அவன் நண்பனையும் அரவணைத்துவிட்டது! அவர்கள் செய்த பாவமோ புண்ணியமோ தெரியாது. சுரேந்திரவையும் சந்திராவையும்;போல் இன்னும் எத்;தனையோ கடலோரக் காவாலிகள் பிழைப்புக்காக ஹொட்டல்களை வலம் வருகிறார்களோ என்பது கேள்விக்குறி.

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் -மிசிசா (30-Aug-16, 5:11 am)
பார்வை : 233

மேலே