உறவு

சிறுவயதில் நம்மை மதிக்காத
உறவுகள் நாம் வளர்ந்து
பெரியவர்களானதும் மதிப்பது
உறவுமுறை பேணுவதற்கல்ல;

எங்கே நாமும் அவர்களை
மதிக்காமல் விட்டுவிடுவோமோ
என்ற பயத்தினால் மட்டுமே!

சிறுவயதில் நம்மை ஒருமையில்
அழைக்கும் நம் தந்தை நாம்
வளர்ந்ததும் நம்மை மரியாதையுடன்
அழைப்பது பயத்தினால் அல்ல.

நம்மை கண்ணியப்படுத்தவே - அதேபோல்
பிறர் நம்மை மதிக்க வேண்டும்
என்ற காரணத்திற்காகவுமே!

எழுதியவர் : famakfana (31-Aug-16, 4:07 pm)
Tanglish : uravu
பார்வை : 257

மேலே