விழித்துக்கொள் வாலிபமே

வேலியைத் தாண்டும்
வேர்களின் பயணத்தை
விழிகள் அறிவதில்லை


பெற்றவர் மனதில்
வழியும்
வலியின் வாடையை
வாலிபம் அறிவதில்லை


இருப்பவை எல்லாம்
எப்படிக்கிடைத்தது
யோசிக்க நேரமில்லை


தூக்கத்தை தொலைத்து
உழைத்திடும் பெற்றவர்
துயரமும் புரிவதில்லை


இறுமாப்புக் கொண்டு
அலைந்தவர் வாழ்வில்
அடைந்தது பெருந்துயரம்


இதை அறியாமல் அலைபவர்
அருகினில் உரைத்தும்
செவிசாய்க்க நேரமில்லை


வீசிடும் வார்த்தையின்
வலிமையைப்பற்றி
ஒரு துளி கவலையில்லை


அதில் வெந்து கருகும்
மூத்தவர் முகத்தினை
பார்க்கவும் தோன்றவில்லை


ஈய்களாய் மொய்க்கும்
ஈனர்கள் கூட்டத்தை
அளவிடத் தெரியவில்லை


அவர்கள் கூடித்திரிந்து
கோடிகள் காட்டும்
பாதையும் சரியில்லை


அறிவெனப்படுவது
அருகில் இருப்பதை
அளவிட்டு அறிகின்ற
அனுபவப்பக்குவமே


இதை அறியும் நாள்தனில்
வேர்உன்தன் விரிசலால்
வேலிகள் சரியலாம்
விழித்துக்கொள் வாலிபமே

எழுதியவர் : வினோ சர்மிலா (31-Aug-16, 5:35 pm)
பார்வை : 101

மேலே