வாழ்வின் வலியை அறிந்தவன் இவன்
வாழ்வின் வலியை அறிந்தவன் இவன் வறுமையின் பசியை உணர்ந்தவன் இவன் வயதின் மதிப்பு தெரிந்தவன் இவன் வாலிபத்தின் ஏக்கம் புரிந்தவன் இவன் தன்னை உருக்கி தங்கம் சேர்கிறான் தங்கைகாக கடின உழைப்பால் கடனை அடைக்குறான் தந்தைகாக இவனின் பகுதி நேர உழைப்பில் துடிக்குறது தம்பியின் முழு நேர படிப்பு இவன் பட்டபாடுகளின் பாதி பலன்கள்,அக்கா கணவனின் கையில் ஆபரண அணிகலன் உழைப்பவன் இவன் ஓடுகிறான்..... வாரம் முழுவதும் ஓடுகிறான்... வார விடுமுறையிலும் ஓடுகிறான் வருடம் முழுவதும் ஓடுகிறான் வாழ்வின் முடிவு வரையும் ஓடுகிறான்... ஓடும் வழியில் இவன் சேகரித்த சில பட்டங்கள் சுயநலவாதி கஞ்சன் கோபக்காரன் பல பட்டங்களையும் பெற்று கொண்டு பல கட்டங்களையும் தாண்டுகிறான், நல்ல திட்டங்களை நிகழ்த்துவதற்காக தனக்கென ஒரு சட்டங்களையும் வகுத்து கொண்டு ஓடுகிறான்...... ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவன்..... முதல் பையன் மூத்தவன்.....!