நிறை மாதமும் நிறைந்த வாழ்வும்

நிறை மாதமும் நிறைந்த வாழ்வும்

அந்த தனியார் வைத்தியசாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சிப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி டிஸ்கோவேரி சேனலில் மக்களின் கவனத்தை ஈர்த்தவண்ணம் இருந்தது. ஆனால் அஸ்வின் மட்டும் ஏதோ சிந்தனையில் தன் அருகில் ஓடி விளையாடும் பிஞ்சுகளையே நோட்டம் விட்டான். துரு துரு விழிகளில் தன்னை பார்த்து சிரித்த அந்த சிறுமி தன் தமயனுடன் தொலைக்காட்சி பார்ப்பதும் சிறிது நேரம் வாசலை பார்ப்பதுமாக இருந்தாள். அந்த இரு கருவிழியை அவன் எங்கோ பார்த்த ஞபாகம் ஆனால் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. குழந்தைகளின் தந்தையை பார்த்தான். ம்ம் யார் என்று தெரியாது. அஸ்வினின் அருகில் அவன் மனைவி பரூசா கவலையே முகமாக உட்கார்ந்திருந்தாள்.
அஸ்வினும் ப்ரூசாவும் திருமணம் செய்து 10 வருடங்கள் மறைந்திருந்தது. ஆனால் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. போகாத வைத்தியரும் இல்லை செய்யாத செலவும் இல்லை. ப்ரூசாவின் தந்தை சீதனமாக தந்த 10 லட்சமும் வைத்தியர்களுக்கே போதுமானதாக இருந்தது. ஆனாலும் ஆரோக்கியமான இருவருக்கும் எந்த குறையும் இல்லை இருந்தும் குழந்தை பாக்கியம் என்பது எட்டா கனியாகவே இருந்தது. வைத்தியர்களும்" உங்க ரெண்டு பேருக்கும் எந்த குறையும் இல்ல ! பட் சம்திங் புரியாத புதிரா இருக்கு..." என்பதே பதிலாக பரூசா சுக்கு நூறாக உடைந்து போனால்.பாவம் அவள் எந்த வைபவத்துக்கும் செல்ல முடியவில்லை இன்னம் விசேஷம் ஒண்டும் இல்லையா? என்பதே கேள்வியாக மாறிப்போனது. வீட்டிற்கு ஒரே பிள்ளையான பரூசா நிறைந்த சீதனத்துடன் அஸ்வினின் கைகோர்த்த போது அஸ்வினுக்கு பெருமையாக இருந்தது. அழகான, அறிவான, செல்வந்த மனைவி யாருக்கு கிடைக்கும். அதுவும் 14 பெண்களை பெண்பார்த்து அலசி ஆராய்ந்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். சில காலம் பாதம் நிலத்தில் படாமல் பறந்த உணர்வு. காலம் செல்ல செல்ல தான் அவர்களுக்குள் குழந்தை இல்லாமையினால் மனம் படும் பாடு புரிய துவங்கியது. இன்று நண்பன் வாஹிதின் அறிவுறுத்தலின் பேரிலே இந்த கைராசி வைத்தியரை பார்க்க வந்தான். வைத்தியர் புகழின் சிகரத்தை தொட்டதாலோ என்னவோ கூட்டம் அலைமோதியது. குழந்தை இல்லாதவர்கள், கர்ப்பிணிகள், என அந்த வார்டு நிறைந்து காணப்பட்டது. பிரபல வைத்தியர்களின் நேர தாமதம் சொல்லவா வேண்டும்? 4 மணிக்கு சமூகம் அளிக்க வேண்டிய வைத்தியர் 5 மணியாகியும் இன்னும் வரவில்லை . களைத்து போயிருந்த அஸ்வினின் கவலையை போக்கும் வண்ணம் வைத்தியர் விரைவாகவே வந்தார்.
1
3
4
5
6
9
நம்பர் ஒழுங்கில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது. அஸ்வினின் 38 வது நம்பர் வரும் வரை வருபவரையும் போவாரையும் கவனித்து கொண்டிருந்தான். பரூசா கர்சிலையென இறுகிய முகத்துடன் நிலத்தை வெறித்து கொண்டிருந்தாள் . அஸ்வினும் அவளுடன் பேசவில்லை பேச தோன்றவும் இல்லை. எங்கே எங்கே என்று வீறிட்ட கண்ணீரை அடக்கவே அவள் நிலம் பார் பாவையாக இருப்பது இந்த 10 ஆண்டுகளில் இவன் அறிந்ததே.
வாப்பா! உம்மாவை எங்க இன்னம் கானம்? 25 வது நம்பர கூப்புடுவாங்களே? துரு துரு சிறுமியின் கேள்விக்கு" ம்ம் நிஷாட குட்டி தங்கச்சிக்கு உடுப்பு வாங்கிட்டு வந்துருவாங்க உம்மா. அடுத்த கிழமை இன்ஷா அல்லாஹ் குட்டி தங்கச்சிய டொக்டர் அங்கிள் எங்களுக்கு தருவாங்களே!
எய்! குட்டி பாப்பா! ஏ குட்டி பாப்பா என்று நிஷா குதித்தாள். நான் தர மாட்டேன் அது ஏ குட்டி பாப்பா என்றான் அவள் தமயன். இருவருக்கும் யுத்தம் வர முன் சமாதான கொடியை தூக்கினார் தந்தை. நபீல், நிஷா சண்டை புடிச்ச டொக்டர் அங்கிள் கோவத்துல பாப்பாவை குடுக்க மாட்டாங்க! என்னும் போதே நிறைந்த வயிறுடன் பெண்ணின் முழு பூரிப்புடன் வாட்டுக்குள் வந்தாள் அக்குழந்தைகளின் தாய். அஸ்வின் நிறைந்த வயிறை பார்த்து ஏக்கத்துடன் அவள் முகத்தை நோக்க அதே கண்கள் துரு துரு விழியின் ரகசியம் புரியாமல் புரிந்தது..
சல்மா! அவனின் பெண் பார்க்கும் படலத்தில் இவளும் ஒரு கதாநாயகி. மறந்து போன முக்கிய பாத்திரம்....12 வருடங்களுக்கு முன் இவனால் இவன் குடும்பத்தால் சீதனம் என்னும் பொக்கிஷம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட பேதை. அஸ்வின் அவனை அறியாமல் கடந்த காலத்துக்குள் கடத்தி செல்லப்பட்டான்.....
தம்பி! பொண்ண நல்லா பாத்துக்கோ! மருவ அது குறை இது குறைண்டு என்னிடம் சொல்ல வானம். தமக்கை சுலைகாவின் வேண்டுதலுக்கே மீண்டும் அவள் முகத்தை ஏறிட்டான். அதே துரு துரு துளைக்கும் விழிகளில் இளமையின் கதிர்களின் பூவனமாய் வீற்றிருந்தால் சல்மா. சம்மதம் என்ற வார்த்தைகள் சத்தம் இல்லாமல் வெளிவந்தன. சுமுகமான எல்லாம் முடியும் தருவாயில் 10 லட்சம் சீதனம் மெல்ல வெளியே எட்டி பார்க்க. சுகைப் சல்மாவின் தந்தை தன் வறுமையின் வாடலையும் சல்மாவின் பின் பொறுப்பாய் இருந்த 2 சகோதரிகளையும் சுட்டி காட்ட சுலைகாவுக்கும், சுமைராவுக்கும் வாயில் மெதுவாய் கரைந்த அல்வாவும் கசக்க தொடங்கியது. அஸ்வின் கைபொம்மையாக சம்மதம் ஒரே அணுகுண்டு தாக்குதலில் சிதைந்தது. துரு துரு கண்ணில் மின்னிய கண்ணீர் நிலத்தை தொட, சல்மாவின் தந்தை " எல்லாம் முடிவாகி கடைசி நேரத்தில இப்படி சொல்றிங்களே! ஏன்டா மகளுக்கு என்னால முடிந்த எல்லாம் செய்றேன் ஆனால் 10 லட்சம் பொருந்தித்து தர ஏலாம போன நயவஞ்சகன்னா நான் இறக்க ஏலா.. " அவர் கண்ணீர் காற்றோடு சங்கமமாக "பெண் பாவம் பொல்லாதது கொஞ்சம் யோசிங்கோ! வயதான யாரோ சொல்ல " தமக்கைகளின் செல் தாக்குதலில் எல்லாம் சுக்கு நூறாய் மாறி ்கல்யாணம் முறிந்த விட்டது... நிகழ் காலத்திற்குள் கஷ்டப்பட்டு கால் வைத்தான் அஸ்வின். கனத்த மனதுடன் ஏறிட எவ்வித சலனமும் இல்லாமல்
சல்மா தன் செல்வங்களுடன் வரப்போகும் குட்டிப்பாப்பாவை சுமந்த வயிருடன் நிறைந்த மாதமும் நிறைந்த முகமாகவும் உள்ளே சென்றாள்.
அஸ்வினுக்கு மெல்ல புரிந்தது வைத்தியர்களுக்கு தெரியாமலிருந்த ரகசியம்..
முற்றும்.....

எழுதியவர் : மாஹிரா (1-Sep-16, 8:02 am)
பார்வை : 341

மேலே