முரண்

முரண்:
"""""""

அலுவலகம் உள்ளே நுழைந்த ஐந்து நிமிடங்களில் அலுத்துக்கொண்டாள் ரேவதி "ஹும்... என்ன உலகமடா சாமி... இந்த காலத்திலயும் பெண்களுக்கான சுதந்திரம் கிடைக்கறது இல்ல.!! எந்த பேப்பர படிச்சாலும் பெண்களுக்கு எதிரான வன்முறை செய்தியாவே இருக்கு" என்றவள் பட்டென மலர் அந்த கேள்வியை கேட்டதும் யோசித்தாள்..
''மருமகளை பெண் என்று மதிக்காமல் கொடுமைபடுத்தும் மாமியாரும் பெண். மாமியாரை அம்மாவாக நினைக்காத மருமகளும் பெண்.மகனையோ.. கணவனையோ.. இன்னொரு பெண்ணுக்கு எதிராகத் தூண்டி கொடுமைக்கு ஆளாக்குவதும் பெண்ணே..அத்தனையும் செய்துவிட்டு ஆணாதிக்க சமுகம் என்று எதிர்பாலர்மீது பழிசுமத்தி.. அழகாய் தப்பித்து அனுதாபம் தேடி.. இடஒதுக்கீடு போராட்டம் செய்வதும் பெண்களுக்கு எதிரான பெண்களின் மடமைதானோ'' என்று சிந்தனையின் நடுவே சட்டென சுட்டது மனதை ''வரும் வழியில் அமங்கலி இவளென முகம் சுழித்த ரேவதியின் செயல்''

பெண்களுக்கு பெண்களே எதிரிதானே? -என்ற மலரின் கேள்வியால்..

எழுதியவர் : moorthi (1-Sep-16, 12:28 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : muran
பார்வை : 178

மேலே