பூவரசம் பூ அவள்

பூவரசம் பூ அவள்
அரைத்த மஞ்சள் பூ அவள்
என்னை அசைத்துவிட்ட பூ அவள்
மயக்கும் மழலை பூ அவள்
புன்னகையால் என்னை
மயக்கிவிட்டாள் பூ அவள்....
சந்தன நிறத்து பூ அவள்
என்னை சாய்த்துவிட்ட பூ அவள்
தலையில் சூடிடாத பூ அவள்
கனிமொழியால் என்னை
கரைத்துவிட்டாள் பூ அவள்....
காதலில் வாழ்ந்திடும் பூ அவள்
என் காதலை தூண்டிய பூ அவள்
பல இதயங்கள் சூழ்ந்திட்ட பூ அவள்
என் ஒரு இதயத்தை
கொள்ளையடித்தாள் பூ அவள்....
என் காதல் பூவினை மலர்த்திய
பூ அவள்...
தன் இதயமெனும் குழலாலே
என் பூவிதயம் பறித்துவிட்டாள்
பூவரசம் பூ அவள்....!