ராமர் பாலமும் வீணாய்ப்போனவர்களும்

ராமர் பாலம் என்ற பெயரில் சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து பரிவாரம் நமக்கு ஏற்படுத்திய நட்டம் என்ன?

உலகின் தொழிற்சாலை நாடுகளான சீனா, கொரியா, தைவான், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா ஆகியவை தென்கிழக்கு ஆசியாவில் இருக்கின்றன

தொழிற்சாலைகளை நடத்த தேவைப்படும் பெற்றோலிய பொருட்களை விற்கும் அரபு நாடுகள் மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கின்றன

பொருட்களை விற்கும் சந்தை நாடுகள் ஐரோப்பாவில் இருக்கின்றன, இந்த மூன்றையும் இணைக்கும் கடல் பாதையாக இந்திய பெருங்கடல் இருக்கிறது, இலங்கை ஒரு முக்கியமான Transit பாய்ன்ட் என்று சொல்லகூடிய கப்பல்களை நிரப்பும் பொருள் மாற்றும் இடமாக இருக்கிறது.

மக்கள் வளமும், கல்வியும் உள்ள தமிழ்நாட்டில் இந்த மணல் திட்டுகளை கடலில் தோண்டி ஒழுங்கான வழிதடம் அமைத்து இருந்தால் தூத்துக்குடி அணைத்து பொருட்களையும் மாற்றும் இடமாகவும் இந்நேரம் மாறி பல ஆயிரகணக்கான குடும்பங்களுக்கு வேலை தந்திருக்கும், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சாதிசண்டைகளை விட்டுவிட்டு தொழிற்சாலைகளில் பிசியாகி இருப்பார்கள்.

இன்று நிலைமை என்ன
மூன்று பெரிய துறைமுகங்கள் வந்துவிட்டன

1. சீனா செலவில் கொழும்பில் மிகப்பெரிய துறைமுகம், இந்தியாவிற்கு வாய்ப்பு கிடையாது என்று சொல்லப்பட்டு விட்டது.

2. சீனாவில் இருந்து பாகிஸ்தானின் க்வாடர் என்ற அரபிக்கடல் துறைமுகத்திற்கு அதிவேக ரயில் மூலம் சரக்குகள் வந்து அங்கிருந்து கப்பல் மூலம் மத்திய கிழக்கிற்கும் ஐரோப்பாவிற்கும் செல்லும், அதேரயில் மத்திய கிழக்கில் இருந்து பெற்றோலை சீனா கொண்டு செல்லும்.

3. சீனாவில் இருந்து இரானின் சாபகார் என்ற பாரசீக வளைகுடா துறைமுகத்திற்கு அதிவேக ரயில் மூலம் சரக்குகள் வந்து அங்கிருந்து கப்பல் மூலம் மத்திய கிழக்கிற்கும் ஐரோப்பாவிற்கும் செல்லும், அதேரயில் மத்திய கிழக்கில் இருந்து பெற்றோலை சீனா கொண்டு செல்லும்.

நம்பிக்கை என்ற ஒற்றை பயன்படாத வார்த்தையால் நமக்கு இவ்வளவு போட்டி.

வரவேண்டிய முன்னேற்றத்தை தடுத்து நமது பிள்ளைகளின் வருங்காலதுடன் விளையாடிய முட்டாள்கள் நம்மை ஆள்கிறார்கள்.

பல்லாயிரம் வேலை வாய்ப்புகளை இழந்தும் ராமநாதபுரம் மாவட்டமே வாய்ப்புகளை நழுவவிட்டும் இருக்கிறது, ராமநாதபுர மாவட்டத்தில் எங்களுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது என்று பரிவாரங்கள் சொல்லும்பொழுது நம் மக்களை திருத்த வழியொன்றும் இல்லை என்றே என்ன தோன்றுகிறது.

#படித்ததும்_சுட்டது

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (1-Sep-16, 8:46 pm)
பார்வை : 156

சிறந்த கட்டுரைகள்

மேலே