உணர்ந்திடா புரிந்திட்ட உளம்

அமைதியின் வண்ணமாகி கறை வீற்றிடா
முழுமதியின் நகலாய் முதலாய் தோன்றிட!

அடியேன் அகப்பட்டேன் அணுவளவும் நீற்றிடா
ஈர்ப்பு விசையின் தன்மையறியா மூடனாயிட!

உன்கருவிழி எனைநோக்கிட சுற்றம் உணர்ந்திடா
என்செய்கையால் உன்னுளம் கவர்ந்தெண்ணிட!

புறம் தூண்டப்பட்ட ஒளி வேகமறிந்திடா
பயணமென்னுள் உன்கவனம் எனை சூழ்ந்திட!

மொழிஅறியா இயற்றதோர் அயற்சொல் அகமறிந்திடா
காவிய கதையினில் உனை புனைந்திட!

வேகமெடுத் தோடியதென் அறிவுச்செல்வம் அகபட்டிடா
கவசம் கட்டுப்படுத்திடா குதிரை ஆகிட !

மேனிதனை நொடிதீண்டி மோகந்தனை அண்டிடா
இன்புறும் வேளைதனை முயன்றுதன் பற்றகற்றிட!

மலர்ந்த மனமாகிய மல்லியை மணம்முடித்திடா
உன்விரல் தாமரை தனைஎன் விரல்கோர்த்திட!

பறைசாற்றிட்டேன் என்னுளம் தனை நீஅறிந்திடா
உயிரோ வியமாய் என்மனை விளக்கேற்றிட!

உணர்வித்தேன் ஈரேழு உலகு உணர்ந்திடா
செயல்களில் வார்த்தைகளில் உன்னுள் நானாகிட!

மறுத்துவித்தாய் மாறுமென் றாகிடாய் செதுக்கிடா
சிற்பத்தின் கல் உடைபொருள் சமுதாய குற்றமாகிட!

நீயோமாற்றான் தோட்டதோர் மலராகி பறித்திடா
பண்பாட்டின் பகுமானத்தின் தோன்றதோர் பதறாகிட !

என்னுள் ஏனோமாற்றம் தனை ஏற்றிடா
மனம் தினம் வாதிட! போராடிட!

முடிவில் கவிதையில் நீயே கருவாகினாய்!
எண்ணங்களில் ஏனோ நினைவாகினாய்!!!

எழுதியவர் : சிவகுமார் ந (3-Sep-16, 2:40 am)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 1048

மேலே