யார் அவள்

தென்றல்
ஆடை
கட்டி
பார்த்ததில்லை
இன்று
பார்க்கிறேன்
நீ
சேலையில்
வரும்
பொழுது!

நிலவு
பூமிக்கு
வந்து
பார்த்ததில்லை
இன்று
பார்க்கிறேன்
நீ
என் அருகில்
நிற்கும்
பொழுது!

மலர்
பேசி
பார்த்ததில்லை
இன்று
பார்க்கிறேன்
நீ
பேசும்
பொழுது!

எழுதியவர் : பர்வதராஜன் மூ (4-Sep-16, 1:35 am)
Tanglish : yaar aval
பார்வை : 239

மேலே