இறைவனின் நாட்டம் மனிதனின் நோக்கம் என்பதே இஸ்லாமிய மார்க்கம்

“உழைக்கும் பணம் அதை வைத்து பெருமையடிக்கும் மனித பிணம்” என்று கூறுவதில் தவறு ஒன்றுமில்லை ! ஏனெனில் பணம் பலரை உயிருடன் பிணமாக மாற்றி விடுகின்றது என்பதே உண்மை.

“கனவு என்ற கற்பனை அதை விற்பனை செய்யும் மனித கூட்டம்” வாழ்வில் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை ! ஏனெனில் இறைவன் என்ற ஒருவன் நினைப்பது மட்டுமே உலகில் நிகழும்.

“இறைவனின் நாட்டம் மனிதனின் நோக்கம் என்பதே இஸ்லாமிய மார்க்கம்” எனவே எண்ணம் என்ற பாவத்தின் சின்னம் மனிதனை வழிகெடுக்கும் வண்ணம் பலவற்றை இழக்க நேரிடும் மனித கூட்டம்.

உள்ளத்தில் உறங்கி கிடந்த நிஜங்கள் அதிகம் ஆனால் நிழலுடன் மேற்கொண்ட பயணங்கள் யாவும் நிஜமானதாக அமையவில்லை ! ஏனென்றால் தனிமை மட்டுமே துணையாக நின்றது.

கடந்து வந்த காலங்கள் யாவும் உள்ளம் கொண்ட சோகத்தையும், செயலால் பட்ட துன்பத்தையும், விட்டோடிய இன்பத்தையும் நினைவூட்டும் நேரமாக மாறிவிட்டதை பிறரால் அறிந்துக்கொள்ள முடியாது.

உண்மை என்ற தன்மை மனிதனை மேன்மை என உலகம் புகழும் என்பதை மறந்து விடக்கூடாது ஏனெனில் மனிதனை மறதியில் சிக்கவைத்து வழிகெடுக்கும் கொடியவன் ஷைத்தான் என்பதை மறந்திடக்கூடாது !

எழுதியவர் : அப்துல் ஹமீட் (4-Sep-16, 7:37 am)
பார்வை : 129

மேலே