எங்கே சென்று விடுவாய் என்னைத் தவிர்த்துவிட்டு

என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்..

எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?

எழுதியவர் : (28-Jun-11, 5:20 pm)
பார்வை : 395

மேலே