துப்பாக்கி சூடு

எங்கேயோ
கொல்லப்படும்
ஒருவனின்
மௌனம்!

முகம் தொலைத்த
கொலைகாரனின்
வார்த்தைகள் அற்ற
பேச்சு!

யார் வீட்டிலோ
காலம் தவறி
கேட்கவிருக்கும்
ஒப்பாரி!

இனிப் பிறக்கும்
குழந்தைகளின் காதிலே
ஓதப்படும்
வேதம்!

சந்தர்பவாத
வெள்ளை வேட்டிக்
கள்ளர்
ஊத காத்தருக்கும்
சங்கு ஒலி!

ஓற்றை
எலும்புக்கு அலையும்
அடிவருடி ஓநாய்கள்
இடபோகும்
நடு நிசி ஊளை!

மனித நேயம்
மெதுவாய் சாக
அடிக்கப்பட்ட
சாவுமணி!!!!!!!!

எழுதியவர் : ஹரிணி நரேன் (4-Sep-16, 5:11 pm)
சேர்த்தது : Harini Naren
Tanglish : thuppaki soodu
பார்வை : 173

மேலே