ஆசிரியை அல்ல அன்னை
(நிராயுத பாணியாய் யாருமற்ற அனாதையாய் இருந்த ஒருவனை படிக்க வைத்து;வாழ வழி சொல்லி, வெளிநாட்டில் நல்ல பணியும் அமைத்துக்கொடுத்த ஆசிரியைக்கு அன்பொழுக அவன் எழுதும் பாசமிகு ஜீவகடிதம்..
கடிதத்தில்....
"விரைவில் திருமண பந்தம் காணும் அவன்,தன்னை ஆசிர்வதிக்க அழைக்கிறான்,ஆசிரியையாக அல்ல...அன்னையாக...!)
கருவறையில் என் உயிர்
தந்தாயே...!
பிரசவித்து
கண்கலங்க விட்டு சென்றதே
உன் உயிர் தாயே...!
பாசமெனும் இரு இதழ்
இல்லையே இறையே
என ஏங்கிய
என்னுள்
கல்வி அறிவூட்டிய
கருணை மிகு ஆசிரியையே...!
வாழ்வேனோ
அனாதையாய்
அஸ்தமனம் தான் முடிவோ?
கரை காண்பேனோ
கலங்கரையாய்
கரை சேர்த்தாய்...!
கற்பித்தாய்
கல்வித்தாய் நீயே ..!
அழகற்ற
அறிவற்ற என்னை
அழகுபடுத்தி
அமரவைத்தாய்
அயல்நாட்டில்....!
உலகம் காட்டினாய்
உயர்வை காட்டினாய்
உன்னை மறப்பேனோ...!
இதோ
என் மணநாள்...
உன் மனம் நிறைந்து
வாழ்த்த வருவாயோ...!
என் வாழ்க்கை தொடர்ந்ததே
உன் அறப்பணியில் ...
நீ
ஆசிரியை அல்ல- என்
அன்னை..!
மறுவாழ்வு தொடங்க
மறு தீபம் ஏற்றி வைப்பாயோ....
என்றும் என்
தாய் நீயே...
தலை நிமிரச்செய்"தாயே"...!