தெருவோர ரவி வர்மா

வீதியில் வரைந்த ஓவியம்
சாரலில் தூறலில் நனைந்து கலைந்து போனது !
வருந்தவில்லை நடந்தான் ..
சிதறிக்கிடந்த சில்லறைகளை எடுத்துக்கொண்டு
நாளை இன்னொரு வீதியில்
நீங்கள் வணங்கும் தெய்வங்கள்
இவன் விரல் நுனியிலிருந்து அவதாரம் புரியும் !
ஏஞ்சலோ இல்லை டா வின்சி இல்லை
இவன் தெருவோர ரவி வர்மா !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-16, 6:05 pm)
பார்வை : 776

மேலே