மரணவலி

உனக்கு உயிர் போகும் அளவு
வலி கொடுத்து பிறந்ததால் என்னை
விட்டு சென்று விட்டாயோ தாயே...

உன்னை பிரிந்த வலியை மறந்து
மறுமணம் முடித்து கொண்டு என்னை
மறந்து விட்டானே தாயே...

தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல்
தனியாக வாழும் என்னை பார்த்து
இந்த சமுதாயம் அனாதை என்கிறது தாயே...

உறவென்று கூற யாரும் இல்லை
சந்தோசம் என்றும் மனதில் இல்லை
மரண படுக்கையில் வாழ்கிறேன் தாயே...

தாய்தந்தை இல்லா காரணாத்தால்
என்னை இந்த சமூகம் ஏற்க மறுக்கிறது
என்னையும் உன்னுடன் அழைத்துச்செல் தாயே...

எழுதியவர் : Maharaj (4-Sep-16, 8:24 pm)
Tanglish : maranavali
பார்வை : 117

மேலே