உயிராய் நீ

தோல்வி மகிழ்வானது - உன்
வெற்றி காணும்போது...
எச்சம் அமுதானது - உன்
மிச்சம் உண்டபோது..
வலியும் சுகமானது - நீ
வரமாய் வந்தபோது..
உலகே எனதானது - என்
உயிராய் நீ உள்ளபோது!!!

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (5-Sep-16, 5:08 am)
Tanglish : uyiraay nee
பார்வை : 581

மேலே