அம்மாவின் பாசம்

உன்னை விட பெரிய தெய்வம் யாருமில்லை

உன் அன்பை விட பெரியது ஒன்றுமில்லை


உன் உயிர் கொடுத்து என்னுயிர் காப்பாய்

ஊமையாய் இருக்கும் என்னை உலக அறிய செய்வாய்


தலைகுனித்த போதும் தட்டி கொடுப்பாய்


தன்னலமற்ற வாழ்வை சொல்லி கொடுத்து

வாழ்க்கை எனும் பாதையில் வழி நடத்தி

மேதை போல் வாழும் என் அம்மா

உன் அன்பை நினைக்கும் போது கண்ணீர் பெருகுதம்மா

எழுதியவர் : நீலகண்டன் (5-Sep-16, 6:55 pm)
Tanglish : ammaavin paasam
பார்வை : 1436

மேலே