தாய்க்கு ஒரு தாலாட்டு

உயிர் தந்த என் தாயே !
உலகத்தை நான் காண
வழிவகுத்த என் தாயே !
அன்பூட்டி அமுதூட்டி
வளர்த்திட்ட என் தாயே !

ஏதம்மா இணை உனக்கும்
உலகத்தில் எனக்கென்றும் !
ஏற்குமா என் உள்ளம்
​வேறொன்றை தெய்வமாய் !​
பணி செய்தாய்
​ ​நீயுமெனக்கு ​
பிணி தீர்க்க
​ மருந்தானாய் ​ ​!​
நான் கோபமுற்ற நேரத்திலும் ​
வருந்தாமல் நான் இருக்க
​மறக்க்காமல் சிரித்திடுவாய் !​

​பிரிந்திட்டாய் எனைவிட்டு
மறந்திட்டாய் உன் மகனை !
நிலைத்திருப்பாய்
​நெஞ்சத்தில் ​என்
மூச்சு நிற்கும்வரை ...

​உனக்கேதும் நான் செய்யவில்லை
​நன்றிக்கடன் தீர்க்கவில்லை ​!​
உயிர்பிரிந்த வேளையிலும்
உன்னருகில் நானில்லை !

வந்திடுவாய் மீண்டும் நீ
பிறந்திடுவேன் நான்
​ மகனாக !
படுத்துறங்கி மகிழ்ந்திடுவேன்
​உன் மடியில் நானுந்தான் !​

உயிர் தந்த என் தாயே !
உலகத்தை நான் காண
வழிவகுத்த என் தாயே !
அன்பூட்டி அமுதூட்டி
வளர்த்திட்ட என் தாயே !
​​
​பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (5-Sep-16, 8:14 pm)
பார்வை : 623

மேலே