மது குடித்துப்பார் - குமார்

மது குடித்துப்பார்

கல்லீரலுக்குக் கல்லறை
கள்லால் நெய்யப்படும்
கள் உண்டவனுக்கு கல்லறை
கல்லால் செய்யப்படும்

இரவு விழித்திருப்பாய்
பகலெல்லாம் படுத்திருப்பாய்

தெரு நாய்களோடு
நட்புகொள்வாய்

கால்வாய்களோடு
நடப்பு கொள்வாய்

குடி மட்டுமே கண்ணில் தெரியும்
குடிசை கூட மண்ணில் தெரியும்

போதை மறையவைக்கும் பாதை
போதை மறையவைக்கும் சூதை

சத்தும் குறையும்
சொத்தும் குறையும்

மதுக்கடை கோவிலாகும்
மதுவே தெய்வமாகும்

காலை கடை திறப்பதற்குமுன்
நீ காத்திருப்பாய்
மாலை கடை மூடாது
கண்விழித்துப் பூத்திருப்பாய்

நடையில் ஆட்டமிருக்கும்
பிடுங்கி உன்ன கூட்டமிருக்கும்

குளிரின்றி கை
நடுங்கும்
குறைவின்றி நோய்
தொடங்கும்

நட்பு வட்டமும்
எதிரி வட்டமும்
போட்டிபோட்டு பெரிதாகும்

தயக்கம் என்ற சொல்
மூளையின் மூலைக்குத் தள்ளப்படும்

மயக்கம் என்ற சொல்
மூளையின் முன்னுக்குத் தள்ளப்படும்

தார்ச்சாலை கட்டிலாகும்
தாய்மொழி பேச நா தழுக்கும்

மூளை மட்டும்
சொர்கத்தில்
மூட்டுவரை
சோகத்தில்


ஜெயின் கடையில்
தாலிச் செயின்
வட்டிக்கடையில்
மெட்டி

சம்பளத்தில்
பாதி சம்சாரத்திற்கு
மீதி சரக்கிற்கு

உன் நிகழ்காலம்
முற்றுப்புள்ளியாகும்
மனைவி மக்களின்
எதிர்காலம் கேள்விக்குறியாகும்

நீ மது குடித்தால்
தீ உன்னைக் குடிக்கும்

மதுவைத் தவிர்ப்போம்

எழுதியவர் : குமார் (5-Sep-16, 4:29 pm)
பார்வை : 268

மேலே