வெட்டியான்

ஆயிரம் பேரை
எரித்திருக்கிறேன்
ஆயிரம் பேரை
புதைத்திருக்கிறேன்
மண்ணுக்கும்
நெருப்புக்கும்
இரையாவதுதான்
வாழ்க்கையென புரிந்திருக்கிறேன்
ஒரு வெட்டியானாய்
உண்மையில் உணர்ந்திருக்கிறேன்!
மனிதனே மனிதனே
நாம் வாழும் வரை
மனிதநேயத்துடன் வாழுவோம்
ஒற்றுமையாய் உண்மையாய்
அன்புடன் உறவாடுவோம்!
உலகம் அமைதியாகும்
வாழ்க்கை இனிமையாகும்!

எழுதியவர் : சூரியன் வேதா (6-Sep-16, 3:34 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : vetiyaan
பார்வை : 274

மேலே