வழியிலே விழி பட ஏங்குவேன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆழ்கடலையே சில கணத்திலே தாண்டுவேன்
தெரிந்திருந்ததும் ஏன் உன்
விழிக்கடலிலே நொடியினில் மூழ்கிவிட்டேன்!!அழகே
பனி விழும் இரவிலே
கருவிழி நினைவலை தீண்டிட
கரைதேடிட படகினில் ஏறினேன்
நிலைமாறினேன் கடல்தாண்டினேன்
கடைசியில் கரையிலே ஏங்கினேன் உயிரே
உன் விழி கணிந்திட
கதிர் வீசிட கதிர்ப்பாகிட படகையும்
துளைத்திட
மறு தரம் ஒரு முறை பார்த்தால் என்ன!
மறு முறை ஒரு தரம் பார்த்தால் என்ன!!