கலைமகளே

விரல்கள் மீட்ட வீணை பேசும்
சுரங்களி னழகில் சொக்கிடு வாளே !
வெள்ளத் தாமரை வீற்ற வாணியை
உள்ளன் புடனே உணர்வாய் மனமே !
பிரமனின் சக்தியின் பேரருள் கிட்டச்
சிரமதைத் தாழ்த்திச் சேவிப் பாயே !
பாமணம் நிறைந்த பைந்தமிழ்ச் சோலையில்
நாமக ளருள்வாள் ஞானம் நமக்கே !