தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் - 64 = 215
“ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டும்
நேரம் நல்ல நேரம் !
இளங்காதலர் இணைந்திடும்
காலம் இளவேனீர் காலம் !
நீ இல்லாமல் பாடாது என்னோட நாவும்
நீ பாடாமல் முழங்காது என்னோட மேளம்”
கல்யாணம் பேச ஊர்கோலம் வாரேன் - உன்
கண்ணொளிக் கண்டு கார்மேகனாவேன்
சித்தாடைக் கட்டி சிதராமல் நானே- ஒரு
சிற்பத்தைப் போல சிதறாமல் நிற்பேன்
பஞ்சுமெத்தை போடுறேன் பாய்விரிக்க வேணாம்டி
தொட்டுவுன்னை தடவுனா துவண்டு போவதேனோடி
கொட்டும் மழைமேகம் நனைந்தும்- தீரலையே தாகம்
தோல்பட்டை எங்கும் ஈரம் - பற்கள் அடிக்குதே தாளம்
கட்டிப்புடி என்னை - ஊத்துமடி வெண்ணை
விட்டுப்புடி அய்யா - நோகுதய்யா கொய்யா
தேகமோடு தேகம் சேர்ந்து
படைக்குது மன்மத விருந்து
காமம் அரங்கேறும் நேரம்
தேகம் இரும்பாக மாறும் !