கனா காலங்கள்:

உன்னைக் கண்டதும் சில கனாக் காலங்கள் என் நெஞ்சினில் உதித்தது;

உன் பார்வையால் பல வசந்தக் காலங்கள் என் வாழ்வினில் பிறந்தது;

என் காதலின் பதிலைக் கேட்பதற்காக காலமும் காத்திருப்பேன்;

என் வாழ்வினில் வசந்தங்கள் நிலைப்பதற்காக யுகமும் காத்திருப்பேன்;

விழிகளைக் காக்கும் இமைகளைப் போல விலகாமல் பார்த்திருப்பேன்;

நேசித்த உன்னைச் சேர்வதற்காகப் பூவாய் பூத்திருப்பேன்;

சில பூக்களை வெறுக்கும் மங்கையர் உண்டு;
பூக்களையே வெறுக்கும் மங்கையர் இல்லை...

எறும்பு ஊரக் கல்லும் தேயும்;
நான் எறும்பு, உன் உள்ளம்???

சிற்பியாய் இருப்பேன், சிற்பமாக மாற்றுவேன்...
காதல் சின்னத்திற்காக...

எழுதியவர் : கார்த்திக்... (28-Jun-11, 8:00 pm)
பார்வை : 558

மேலே