என்னருகே நீ இருந்தால்

என்னருகே நீ இருந்தால்
இந்த உலகினை வெல்வேன்
என்னருகே நீ இருந்தால்
உன்னை நிலாவில் குடி வைப்பேன்
என்னருகே நீ இருந்தால்
நட்த்திரங்களை பிடித்து வந்து
உன் வாசலில் தோரனை கட்டுவேன்
என்னருகே நீ இருந்தால்
வான் மேகங்களை கொண்டு வந்து
உனக்கு அர்ச்சனை செய்வேன்
என்னருகே நீ இருந்தால்
மலையை குடைந்து மாளிகை அமைப்பேன்
என்னருகே நீ இருந்தால்
இருட்டையும் வெளிச்சம் ஆக்குவேன்
என்னருகே நீ இருந்தால்
வறண்ட நிலத்தையும் விளை நிலமாய் மாற்றிடுவேன்..
என்னருகே நீ இருந்தால்
ஆகாய தாமரையை பூமிக்கு கொண்டு வருவேன்
என்னருகே நீ இருந்தால்
காற்றை உனக்கு அடிமை ஆக்குவேன்
என்னருகே நீ இருந்தால்
இந்த பூமி பந்தை கொண்டு வந்து
உன் காலடியில் சேர்பேன்
என்னருகே நீ இருந்தால்
அனைத்தையும் வென்றிடுவேன்....

எழுதியவர் : கா. அம்பிகா (7-Sep-16, 3:42 pm)
பார்வை : 653

மேலே