கண்டேன் அவளை

காற்று தனக்கு
ஆடை வாங்க
சென்றதை கண்டேன்
துணிக்கடையில் அவள் ....

நிலா கொஞ்சம் கொஞ்சமாக
தரையிரங்க கண்டேன்
மின் தூக்கியில்
அவள் ....

பூக்களை சுமந்து
கார்மேகம் போவதை
கண்டேன்
அவள் தலையில் பூக்கள் ....

நட்சத்திரங்களை
தெறிக்க விட்டு
செல்லும் வானம் ஒன்று
கண்டேன் ....
அவள் சிரிப்புக்கள் ....

எழுதியவர் : கிரிஜா.தி (7-Sep-16, 4:48 pm)
பார்வை : 207

மேலே