நான்
![](https://eluthu.com/images/loading.gif)
நான்
======
வெற்றியாளன் என்பதை விட
மனிதன் என்று
சொல்லிக் கொள்ள ஆசைபடுபவள்...
பெருமைபடுபவள்...
இயந்திரத்தை வெறுத்து
இயற்கையையும்
இசையையும் விரும்புபவள்...
எல்லா உயிர்களிடத்திலும்
அன்பு ஒன்றே பொழிபவள்...
தாய் மொழி
தமிழை
தன் உயிரினும்
மேலாக நினைப்பவள்...
பாசத்திற்கு உயிரையும்
தருபவள்...
தவறென்றால்
யாராக இருந்தாலும்
நெற்றிக் கண் திறப்பினும்
குற்றம் குற்றமே
என்று ஓங்கி ஒலிப்பவள்...
சீத்தலை சாத்தனாரின் வழி வந்தவள்...
அது வேறு யாருமல்ல நான் தான்
பிரபாவதி வீரமுத்து