ஊடகம்

(பல்லவி)

உண்மை என்றும் இந்த உலகில் பொய்யாகாது
நேர்மை என்றும் எந்நாளும் தன் வழி மாறாது
மக்களோடு மக்களாக இருப்பவன் இருப்பவன் நான்
கொடுமை கண்டு, அநியாயம் கண்டு ஒழிப்பவன் ஒழிப்பவன் நான்
அகிம்சை வழி செல்வது வீணாகாது
நீதி இந்த மண்ணில் என்றும் சாகாது
மனதோடு லட்சியம் கொண்டவன் கொண்டவன் நான்
அரசியல் கொள்ளை, அடிமை தனத்தை கண்டு எதிர்பவன் எதிர்பவன் நான்
ஊடகம் ஊடகம் ஊடகம் ஊடகம்

(சரணம் 1)

மனதில் உறுதி
முடியும் என்றும் கருதி
வேரின்றி மரங்கள் மண்ணில் இல்லை
முயற்சி செய்யாது வெற்றி இல்லை
காயங்கள் யாவும் ஆறிடும் என்று நம்பிக்கை கொண்டு வா
ஏ... காயங்கள் யாவும் ஆறிடும் என்று நம்பிக்கை கொண்டு வா
ஜாதி மத பிரிவை இனி உடைத்து எறிவோம்
ஜாதி மத பிரிவை இனி உடைத்து எறிவோம்
ஊடகம் தனி ராஜ்ஜியமே
ஊடகம் தனி ராஜ்ஜியமே
ஊடகம் தனி ராஜ்ஜியமே
ஊடகம் மக்களின் மனசாட்சி
ஊடகம் உண்மை இருப்பிடமே
ஊடகம் இது பொதுவுடமை
( உண்மை என்றும் ...)

(சரணம் 2)

தடையெல்லாம் தகர்த்து
தோழா குரல் உயர்த்து
நீ யார் என்று சொல்லிடும் நேரம் இது
உன்னை வீழ்த்திட இங்கு தைரியம் ஏது..?
போராட்டம் செய் கண்ணில் நீரோட்டம் வேண்டாம்
போகும் வரை கடந்து போ
ஏ... போராட்டம் செய் கண்ணில் நீரோட்டம் வேண்டாம்
போகும் வரை கடந்து போ
ஊடகம் தனி ராஜ்ஜியமே
ஊடகம் தனி ராஜ்ஜியமே
ஊடகம் தனி ராஜ்ஜியமே
ஊடகம் மக்களின் மனசாட்சி
ஊடகம் உண்மை இருப்பிடமே
ஊடகம் இது பொதுவுடமை
ஊடகம் உலகை சுழற்றிடுமே
உண்மை என்றும் இந்த உலகில் பொய்யாகாது
நேர்மை என்றும் எந்நாளும் தன் வழி மாறாது
மக்களோடு மக்களாக இருப்பவன் இருப்பவன் நான்
கொடுமை கண்டு, அநியாயம் கண்டு ஒழிப்பவன் ஒழிப்பவன் நான்
அகிம்சை வழி செல்வது வீணாகாது
நீதி இந்த மண்ணில் என்றும் சாகாது
மனதோடு லட்சியம் கொண்டவன் கொண்டவன் நான்
அரசியல் கொள்ளை, அடிமை தனத்தை கண்டு எதிர்பவன் எதிர்பவன் நான்
ஊடகம் ஊடகம் ஊடகம் ஊடகம்

- பிரசன்னா கு

எழுதியவர் : பிரசன்னா கு (8-Sep-16, 9:04 am)
Tanglish : oodagam
பார்வை : 2353

சிறந்த கவிதைகள்

மேலே