எதை கொண்டு நிரப்புவேன்
அவளில்லாத
இருக்கையை
என் நினைவுகளை
கொண்டு
நிரப்பிக் கொண்டிருக்கிறேன்....
அவளில்லாத
தருணங்களில்
அவள் பேசிய
வார்த்தைகளை
மறு ஒளிபரப்பு செய்து
கொண்டிருக்கிறேன் .....
அவளில்லாத
வாழ்க்கையை
எதைக் கொண்டு
நிரப்புவேன் ....