எண்ணக்குவியல்கள்
எண்ணக் குவியலின் மேலேறி
சறுக்கி விளையாட
பக்க அடையாளம் மாட்டி வைத்த
பொன்நூல்
மாட்டிக் கொண்டது என்னுள்
திறந்தேன் மனக்கதவை
தாள்ளோடு கை தழுவி உறவு கொள்ள
ஒவ்வொரு நாள்ளோடு வண்ணம் என் புத்தியில் சொல்ல
ஏராள எண்ணக்குவியில் தொங்கும் என் மனசுவற்றில்
மத்தியில் மாட்டி வைத்திருந்த என் காதலை
வாரி பூசி கொண்டேன்..,
உண்மையாக இத்தருணம் உயிர் என்னோடு பயணித்தது
உஷ்ணம் ஒரே பக்கமாய் வீச
வாடி தழைத்த வாயுப்பை சுவாசிக்க காற்று அல்லாமல் தவிக்க
தென்றலை தேடி தெருவோடு வந்தேன் பழைய காதலனாய்
போதி மரம் நாடி
திரு நீறு பூசிக்கொண்ட சித்தன் அல்ல
பாதி மணம் நான் அடி
பன்னீர் பூசி கொண்ட காதல் பித்தன் அதனாலோ இன்று
கண்ணீரை வாரி வாரி கொட்டும் எத்தன் ஆகா
ஆடி மாதத்து ஆகாயத்தை வசைக்கும்
கணவன் அன்றே
ஆடி மா காற்றில் காதலை பறி கொடுத்த
கயவன் என்றோ வசைத்த என் மனமே
காதல் லேசானது அதனால் காகித பந்தில் நானும் அவளும்
காதலர்களாய் பிரசவித்தோம்
எங்கள் பிறப்பு பிடிக்க வில்லையாம்
அவர்களுக்கு ஜாதி மலரே பிடித்தது
தோட்டத்தில் இரத்த வாசனையை வீசியது
அதுவே அவர்களுக்கு பிடித்தது
அதுவே எங்கள் காதலை கள்ளி பால் ஊற்றி முடித்து
எங்களை கல்லறையில் தள்ளி விட்டு
அவர்கள் நல்லைரையில் வாழ்வதாக எண்ணி கொண்டு திரியும்
கல்லறை ஜாதி மலரே நீ பூக்கா நாள் உண்மை மனிதம் வீசும்
அதைப்பெற என் காதல் உங்கள் முன் வாள் எடுத்து வீசும்